1. [QS]இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான். [QE][QS2]யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான். [QE]
2. [QS]யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள். [QE][QS2]இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது. [QE]
3. [QS]செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று. [QE][QS2]யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று. [QE]
4. [QS]ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. [QE][QS2]ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின. [QE]
5. [QS]செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்? [QE][QS2]யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்? [QE]
6. [QS]மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? [QE][QS2]மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்? [QE]
7. [QS]யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே [QE][QS2]பூமி நடுங்கி அதிர்ந்தது. [QE]
8. [QS]கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார். [QE][QS2]கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார். [QE][PBR]