1. [QS]கர்த்தரைத் துதியுங்கள். [QE][QS]கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்! [QE][QS2]கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். [QE]
2. [QS]கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக. [QE]
3. [QS]சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை [QE][QS2]கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. [QE]
4. [QS]எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர். [QE][QS2]வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது. [QE]
5. [QS]எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை. [QE][QS2]தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார். [QE]
6. [QS]வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம் [QE][QS2]தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார். [QE]
7. [QS]தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார். [QE][QS2]குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார். [QE]
8. [QS]அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். [QE][QS2]அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார். [QE]
9. [QS]ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம், [QE][QS2]ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார். [QE][QS]கர்த்தரைத் துதியுங்கள்! [QE][PBR]