1. கர்த்தரை துதியுங்கள்! [QBR] கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். [QBR2] அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான். [QBR]
2. அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். [QBR2] நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QBR]
3. அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். [QBR2] அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும். [QBR]
4. தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். [QBR2] தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர். [QBR]
5. தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. [QBR2] தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது. [QBR]
6. அவன் விழமாட்டான், [QBR2] ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான். [QBR]
7. அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். [QBR2] அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான். [QBR]
8. அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். [QBR2] அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான். [QBR]
9. அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். [QBR2] அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும். [QBR]
10. தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். [QBR2] அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். [QBR] பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். [QBR2] தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை. [PE]