1. [QS]கர்த்தரை துதியுங்கள்! [QE][QS]கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான். [QE][QS2]அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான். [QE]
2. [QS]அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள். [QE][QS2]நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். [QE]
3. [QS]அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும். [QE][QS2]அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும். [QE]
4. [QS]தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர். [QE][QS2]தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர். [QE]
5. [QS]தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது. [QE][QS2]தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது. [QE]
6. [QS]அவன் விழமாட்டான், [QE][QS2]ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான். [QE]
7. [QS]அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான். [QE][QS2]அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான். [QE]
8. [QS]அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான். [QE][QS2]அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான். [QE]
9. [QS]அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். [QE][QS2]அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும். [QE]
10. [QS]தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள். [QE][QS2]அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள். [QE][QS]பின்பு அவர்கள் மறைந்து போவார்கள். [QE][QS2]தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை. [QE][PBR]