1. {#2தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று } [QS]கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, [QE][QS2]“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார். [QE]
2. [QS]உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார். [QE][QS2]உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும். [QE][QS2]பிற நாடுகளிலும்நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும். [QE]
3. [QS]நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது [QE][QS2]உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள் [QE][QS]அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள். [QE][QS2]அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள். [QE][QS]அந்த இளைஞர்கள் [QE][QS2]தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள். [QE][PBR]
4. [QS]கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார். [QE][QS2]அவர் மனம் மாறமாட்டார். [QE][QS]“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர். [QE][QS2]மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.” [QE][PBR]
5. [QS]என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார். [QE][QS2]அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார். [QE]
6. [QS]தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார். [QE][QS2]பூமி பிரேதங்களால் நிரப்பப்படும். [QE][QS2]தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார். [QE][PBR]
7. [QS]வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார். [QE][QS2]அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்! [QE][PBR]