1. {#2இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் } [QS]கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன். [QE][QS]ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்? [QE][QS2]நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள். [QE][PBR]
2. [QS]தீயோர் வேட்டைக்காரனைப் போன்றோர். இருளில் அவர்கள் ஒளிவார்கள். [QE][QS2]அவர்கள் வில்லை வளைத்து அம்பைக் குறிவைப்பார்கள். [QE][QS2]நல்ல, நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் மேல் எய்வார்கள். [QE]
3. [QS]நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்? [QE][QS2]நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்? [QE][PBR]
4. [QS]கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். [QE][QS2]பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார். [QE][QS]நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார். [QE][QS2]கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும். [QE]
5. [QS]கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார். [QE][QS2]கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார். [QE]
6. [QS]தீயோர்மேல் வெப்பமான நிலக்கரியையும், எரியும் கந்தகத்தையும் மழையாய்ப் பொழியச் செய்வார். [QE][QS2]வெப்பமான எரியும் காற்றைமட்டுமே அத்தீயோர் அனுபவிப்பார்கள். [QE]
7. [QS]ஆனால் கர்த்தர் நல்லவர். [QE][QS2]நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார். [QE][QS2]நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள். [QE]