1. {இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று} [PS] தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும். [QBR]
2. தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். [QBR2] உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். [QBR]
3. என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். [QBR2] எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். [QBR]
4. நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள். [QBR2] எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன். [QBR]
5. நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன். [QBR2] ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள். [QBR] நான் அவர்களை நேசித்தேன். [QBR2] ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள்.
6. அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும். [QBR2] அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும். [QBR]
7. என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும். [QBR2] என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும். [QBR]
8. என் பகைவன் உடனே மடியட்டும். [QBR2] அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும். [QBR]
9. என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும். [QBR]
10. அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும். [QBR]
11. என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். [QBR2] அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும். [QBR]
12. என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன். [QBR2] ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன். [QBR]
13. என் பகைவனை முற்றிலும் அழியும். [QBR2] அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும். [QBR]
14. என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன். [QBR2] அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன். [QBR]
15. கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன். [QBR2] ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன். [QBR]
16. ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. [QBR2] அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. [QBR2] அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான். [QBR]
17. பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான். [QBR2] எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும். [QBR2] அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை. [QBR]
18. சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும். [QBR2] சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும். [QBR2] சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும். [QBR]
19. சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும். [QBR2] சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும்.
20. என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன். [QBR2] என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன். [QBR]
21. கர்த்தாவே, நீரே என் ஆண்டவர். [QBR] எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும். [QBR2] உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும். [QBR]
22. நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன். [QBR2] நான் உண்மையிலேயே கவலையடைகிறேன். [QBR2] என் இருதயம் நொறுங்கிப்போகிறது. [QBR]
23. என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன். [QBR2] சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன். [QBR]
24. நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. [QBR2] நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன். [QBR]
25. தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள். [QBR2] அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள். [QBR]
26. என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! [QBR2] உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்! [QBR]
27. நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள். [QBR2] உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள். [QBR]
28. அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். [QBR2] அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். [QBR2] அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன். [QBR]
29. என் பகைவர்களை வெட்கப்படுத்தும்! [QBR2] அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும். [QBR]
30. நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். [QBR2] பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன். [QBR]
31. ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். [QBR2] அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார். [PE]