1. {#2இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று } [QS]தேவனே, என் ஜெபத்திற்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதேயும். [QE]
2. [QS]தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். [QE][QS2]உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். [QE]
3. [QS]என்னைப்பற்றி ஜனங்கள் வெறுப்படையும் காரியங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். [QE][QS2]எந்தக் காரணமுமின்றி அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். [QE]
4. [QS]நான் அவர்களை நேசித்தேன், அவர்களோ என்னைப் பகைக்கிறார்கள். [QE][QS2]எனவே இப்போது, தேவனே, உம்மை நோக்கி ஜெபம் செய்கிறேன். [QE]
5. [QS]நான் அந்த ஜனங்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்தேன். [QE][QS2]ஆனால் அவர்களோ எனக்குத் தீய காரியங்களைச் செய்கிறார்கள். [QE][QS]நான் அவர்களை நேசித்தேன். [QE][QS2]ஆனால் அவர்களோ, என்னைப் பகைத்தார்கள். [QE][PBR]
6. [QS]அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும். [QE][QS2]அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும். [QE]
7. [QS]என் பகைவன் தவறு செய்ததையும், அவனே குற்றவாளி என்பதையும் நீதிபதி முடிவு செய்யட்டும். [QE][QS2]என் பகைவன் கூறுபவை யாவும் அவனுக்கே மேலும் தீமையைத் தேடித்தரட்டும். [QE]
8. [QS]என் பகைவன் உடனே மடியட்டும். [QE][QS2]அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும். [QE]
9. [QS]என் பகைவனின் குழந்தைகள், அநாதைகளாகி, அவன் மனைவி விதவையாகட்டும். [QE]
10. [QS]அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும். [QE]
11. [QS]என் பகைவனிடம் கடன்பட்டிருக்கிற ஜனங்கள் அவனுக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளட்டும். [QE][QS2]அவன் உழைத்த எல்லாப் பொருட்களையும் எவராவது எடுத்துக்கொள்ளட்டும். [QE]
12. [QS]என் பகைவனுக்கு ஒருவனும் இரக்கம் காட்டமாட்டான் என நான் நம்புகிறேன். [QE][QS2]ஒருவனும் அவனது குழந்தைகளுக்குக் கிருபை காட்டமாட்டான் எனவும் நான் நம்புகிறேன். [QE]
13. [QS]என் பகைவனை முற்றிலும் அழியும். [QE][QS2]அடுத்த தலைமுறையினர் அவன் பெயரை எல்லாவற்றிலிருந்தும் அகற்றிப்போடட்டும். [QE]
14. [QS]என் பகைவனின் தந்தையின் பாவங்களை கர்த்தர் நினைவில்கொள்வார் என்று நான் நம்புகிறேன். [QE][QS2]அவனது தாயின் பாவங்கள் என்றும் நீக்கப்படுவதில்லை என நான் நம்புகிறேன். [QE]
15. [QS]கர்த்தர் அப்பாவங்களை என்றென்றும் நினைவு கூருவார் என நான் நம்புகிறேன். [QE][QS2]ஜனங்கள் என் பகைவனை முற்றிலும் மறந்துப்போகும்படி அவர் ஜனங்களை வற்புறுத்துவார் என நான் நம்புகிறேன். [QE]
16. [QS]ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. [QE][QS2]அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. [QE][QS2]அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான். [QE]
17. [QS]பிறருக்குத் தீயவை நிகழ வேண்டுமெனக் கேட்பதில் அத்தீயவன் ஆர்வமுடையவனாக இருந்தான். [QE][QS2]எனவே அத்தீமைகள் அவனுக்கு நேரிடட்டும். [QE][QS2]அத்தீய மனிதன் ஒருபோதும் ஜனங்களுக்கு நல்லவை நிகழ வேண்டுமெனக் கேட்டதில்லை. [QE]
18. [QS]சாபங்கள் அவன் ஆடைகளாகட்டும். [QE][QS2]சாபங்கள் அவன் பருகும் தண்ணீராகட்டும். [QE][QS2]சாபங்கள் அவன் சரீரத்தின் மீது எண்ணெயாகட்டும். [QE]
19. [QS]சாபங்கள் அத்தீயோனைச் சுற்றியிருக்கும் ஆடைகளாகட்டும். [QE][QS2]சாபங்கள் அவன் இடுப்பைச் சுற்றியிருக்கும் கச்சையாகட்டும். [QE][PBR]
20. [QS]என் பகைவனுக்கு அக்காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் செய்வார் என நான் நம்புகிறேன். [QE][QS2]என்னைக் கொல்ல முயன்றுக்கொண்டிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் அவற்றைச் செய்வார் என நான் நம்புகிறேன். [QE]
21. [QS]கர்த்தாவே, நீரே என் ஆண்டவர். [QE][QS]எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும். [QE][QS2]உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும். [QE]
22. [QS]நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன். [QE][QS2]நான் உண்மையிலேயே கவலையடைகிறேன். [QE][QS2]என் இருதயம் நொறுங்கிப்போகிறது. [QE]
23. [QS]என் வாழ்க்கை பகலின் முடிவை அறிவிக்கும் நீண்ட நிழலைப்போன்றது என நான் உணர்கிறேன். [QE][QS2]சிலர் தள்ளிவிடும் பூச்சியைப்போல் உணருகிறேன். [QE]
24. [QS]நான் பசியாயிருப்பதால் என் முழங்கால்கள் சோர்ந்துள்ளன. [QE][QS2]நான் எடை குறைந்து மெலிந்து போகிறேன். [QE]
25. [QS]தீய ஜனங்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள். [QE][QS2]அவர்கள் என்னைப் பார்த்துத் தலையைக் குலுக்கிக்கொள்கிறார்கள். [QE]
26. [QS]என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! [QE][QS2]உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்! [QE]
27. [QS]நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள். [QE][QS2]உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள். [QE]
28. [QS]அத்தீயோர் என்னைச் சபித்தனர். ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதிக்க முடியும். [QE][QS2]அவர்கள் என்னைத் தாக்கினார்கள், அவர்களைத் தோற்கடியும். [QE][QS2]அப்போது உமது ஊழியனாகிய நான் சந்தோஷமடைவேன். [QE]
29. [QS]என் பகைவர்களை வெட்கப்படுத்தும்! [QE][QS2]அவர்கள் தங்கள் வெட்கத்தை ஒரு மேலாடையைப் போல் அணிந்துகொள்ளட்டும். [QE]
30. [QS]நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். [QE][QS2]பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன். [QE]
31. [QS]ஏனெனில் கர்த்தர் திக்கற்றோருக்கு சார்பாக இருக்கிறார். [QE][QS2]அவர்களை மரணத்திற்கென்று குற்றம்சாட்ட முயல்வோரிடமிருந்து தேவன் அவர்களைக் காப்பாற்றுகிறார். [QE]