1. {#2தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று } [QS]தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். [QE][QS2]எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது. [QE]
[QS2]2. சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம். [QE]
3. [QS]கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். [QE][QS2]பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம். [QE]
4. [QS]கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. [QE][QS2]உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. [QE]
5. [QS]தேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்! [QE][QS2]உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும். [QE]
6. [QS]தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும். [QE][QS2]எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும். [QE][PBR]
7. [QS]தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, [QE][QS2]“நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! [QE][QS]என் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன். [QE][QS2]அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். [QE][QS2]அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன் [QE]
8. [QS]கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும். [QE][QS2]எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும். [QE][QS2]யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல் [QE]
9. [QS]மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். [QE][QS2]ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. [QE][QS2]நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.” [QE][PBR]
10. [QS](10-11)யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்? [QE][QS2]யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்? [QE][QS]தேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும். [QE][QS2]ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர். [QE][QS2]நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை! [QE]
11.
12. [QS]தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! [QE][QS2]ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது! [QE]
13. [QS]தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும். [QE][QS2]தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார். [QE]