1. கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். [QBR2] அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள். [QBR2] அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள். [QBR]
2. கர்த்தரை நோக்கிப் பாடுங்கள். [QBR2] அவருக்குத் துதி களைப் பாடுங்கள். [QBR2] அவர் செய்யும் வியக்கத் தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள். [QBR]
3. கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள். [QBR2] ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்! [QBR]
4. வல்லமைக்காகக் கர்த்தரிடம் போங்கள். [QBR2] உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள். [QBR]
5. அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள். [QBR2] அவர் செய்த அதிசயங்களை யும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள். [QBR]
6. நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர். [QBR2] நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர். [QBR]
7. கர்த்தரே நமது தேவன். [QBR2] கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார். [QBR]
8. தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள். [QBR2] ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள். [QBR]
9. தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார். [QBR2] தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதி யைச் செய்தார். [QBR]
10. பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார். [QBR2] தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார். [QBR2] அது என்றென்றும் தொடரும்! [QBR]
11. தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன். [QBR2] அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார். [QBR]
12. ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார். [QBR2] அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர். [QBR]
13. அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும், [QBR2] ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள். [QBR]
14. ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை. [QBR2] அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார். [QBR]
15. தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள். [QBR2] எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார். [QBR]
16. தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார். [QBR2] ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை. [QBR]
17. ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார். [QBR2] யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான். [QBR]
18. யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள். [QBR2] அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள். [QBR]
19. அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான். [QBR2] யோசேப்பு நேர்மையானவன் என்பதைக் கர்த்தருடைய செய்தி நிரூபித்தது. [QBR]
20. எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான். [QBR2] தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான். [QBR]
21. அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார். [QBR2] அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான். [QBR]
22. பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான். [QBR2] யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான். [QBR]
23. பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான். [QBR2] யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான். [QBR]
24. யாக்கோபின் குடும்பம் பெருகிற்று. [QBR2] அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள். [QBR]
25. எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள். [QBR2] அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள். [QBR]
26. எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார். [QBR2] தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான். [QBR]
27. காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு [QBR2] தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார். [QBR]
28. தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார். [QBR2] ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை. [QBR]
29. எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார். [QBR2] எல்லா மீன்களும் மடிந்தன. [QBR]
30. அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. [QBR2] அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன. [QBR]
31. தேவன் கட்டளையிட்டார். [QBR2] ஈக்களும் பேன்களும் வந்தன. [QBR2] அவை எங்கும் நிரம்பின. [QBR]
32. தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார். [QBR2] நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது. [QBR]
33. தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார். [QBR2] அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார். [QBR]
34. தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன. [QBR2] அவை எண்ணமுடியாத அளவு இருந்தன! [QBR]
35. வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும், [QBR2] வயலின் எல்லா பயிர்களையும் தின்றன. [QBR]
36. பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார். [QBR2] தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார். [QBR]
37. பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். [QBR2] அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர். [QBR2] தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை. [QBR]
38. தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது. [QBR2] ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள். [QBR]
39. தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார். [QBR2] தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணைத் தேவன் பயன்படுத்தினார். [QBR]
40. ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார். [QBR2] தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார். [QBR]
41. தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று. [QBR2] பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
42. தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார். [QBR2] தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார். [QBR]
43. தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார். [QBR2] மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்! [QBR]
44. பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். [QBR2] பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர். [QBR]
45. ஏன் தேவன் இதைச் செய்தார்? [QBR2] அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும். [QBR] அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தரைத் துதியுங்கள்! [PE]