1. [QS]என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! [QE][QS2]என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்! [QE][QS]நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர். [QE]
[QS2]2. ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர். [QE][QS]நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர். [QE]
[QS2]3. தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர். [QE][QS]அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக் [QE][QS2]காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர். [QE]
4. [QS]தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர்.[* தேவனே...உண்டாக்கினீர் அல்லது “உமது தூதர்களை ஆவியாக உருவாக்கினீர்” எனப்படும். ] [QE][QS2]உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர். [QE]
5. [QS]தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர். [QE][QS2]எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. [QE]
6. [QS]நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர். [QE][QS2]தண்ணீர் மலைகளை மூடிற்று. [QE]
7. [QS]நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று. [QE][QS2]தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று. [QE]
8. [QS]தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று, [QE][QS2]பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது. [QE]
9. [QS]நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர். [QE][QS2]தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது. [QE][PBR]
10. [QS]தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர். [QE][QS2]பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது. [QE]
11. [QS]நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. [QE][QS2]காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன. [QE]
12. [QS]வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். [QE][QS2]அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும். [QE]
13. [QS]மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். [QE][QS2]தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன. [QE]
14. [QS]மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார். [QE][QS2]நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம். [QE][QS2]அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன. [QE]
15. [QS]நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும் [QE][QS2]நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும், [QE][QS2]நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார். [QE][PBR]
16. [QS]லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. [QE][QS2]கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார். [QE]
17. [QS]அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். [QE][QS2]பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும். [QE]
18. [QS]காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். [QE][QS2]குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும். [QE][PBR]
19. [QS]தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர். [QE][QS2]எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும். [QE]
20. [QS]எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து [QE][QS2]சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர். [QE]
21. [QS]தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல [QE][QS2]தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும். [QE]
22. [QS]அப்போது சூரியன் எழும்பும், [QE][QS2]மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும். [QE]
23. [QS]அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், [QE][QS2]அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள். [QE][PBR]
24. [QS]கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். [QE][QS2]பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. [QE][QS2]நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம். [QE]
25. [QS]சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! [QE][QS2]பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! [QE][QS2]எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன. [QE]
26. [QS]நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது [QE][QS2]கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன. [QE][PBR]
27. [QS]தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன. [QE][QS2]தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர். [QE]
28. [QS]தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். [QE][QS2]நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும். [QE]
29. [QS]நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். [QE][QS2]அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். [QE][QS]அவை சோர்ந்து மரிக்கும். [QE][QS2]அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும். [QE]
30. [QS]ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! [QE][QS2]நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர். [QE][PBR]
31. [QS]கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்! [QE][QS2]கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும். [QE]
32. [QS]கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும். [QE][QS2]அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும். [QE][PBR]
33. [QS]என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். [QE][QS2]நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன். [QE]
34. [QS]நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். [QE][QS2]நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன். [QE]
35. [QS]பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். [QE][QS2]தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக. [QE][QS]என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! [QE][QS2]கர்த்தரை துதியுங்கள்! [QE][PBR]