1. {#2தாவீதின் ஒரு பாடல் } [QS]என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! [QE][QS2]என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள். [QE]
2. [QS]என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! [QE][QS2]அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே. [QE]
3. [QS]நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். [QE][QS2]அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். [QE]
4. [QS]தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். [QE][QS2]அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார். [QE]
5. [QS]தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். [QE][QS2]அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார். [QE]
6. [QS]கர்த்தர் நியாயமானவர். [QE][QS2]பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார். [QE]
7. [QS]தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார். [QE][QS2]அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார். [QE]
8. [QS]கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர். [QE][QS2]தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர். [QE]
9. [QS]கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை. [QE][QS2]கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை. [QE]
10. [QS]நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், [QE][QS2]ஆனால் நமக்குரிய தண்டனையைத் தேவன் வழங்கவில்லை. [QE]
11. [QS]வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, [QE][QS2]அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது. [QE]
12. [QS]மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ [QE][QS2]அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார். [QE]
13. [QS]தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று [QE][QS2]கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார். [QE]
14. [QS]தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். [QE][QS2]நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார். [QE]
15. [QS]நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார். [QE][QS2]நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார். [QE]
16. [QS]நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார். [QE][QS2]அம்மலர் சீக்கிரம் மலர்கிறது. [QE][QS]வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது. [QE][QS2]பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது. [QE]
17. [QS]ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார். [QE][QS2]என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார். [QE][QS2]தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர். [QE]
18. [QS]அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர். [QE][QS2]அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர். [QE]
19. [QS]பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. [QE][QS2]அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார். [QE]
20. [QS]தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்! [QE][QS2]தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள். [QE][QS2]நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள். [QE]
21. [QS]அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள். [QE][QS2]நீங்கள் அவரது பணியாட்கள். [QE][QS2]தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள். [QE]
22. [QS]எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர். [QE][QS2]எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார். [QE][QS2]அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும். [QE][QS]என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. [QE][PBR]