1. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். [QBR2] உதவிக்காக நான் கதறும்போது கவனியும். [QBR]
2. கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும். [QBR2] உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும். [QBR]
3. என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது. [QBR2] எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது. [QBR]
4. என் வலிமை போயிற்று. [QBR2] நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன். [QBR2] நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன். [QBR]
5. என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது. [QBR]
6. பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன். [QBR2] பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன். [QBR]
7. என்னால் தூங்க இயலவில்லை. [QBR2] கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன். [QBR]
8. என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள். [QBR2] அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள். [QBR]
9. என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது. [QBR2] என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது. [QBR]
10. ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர். [QBR2] நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர்.
11. பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது. [QBR2] நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன். [QBR]
12. ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்! [QBR2] உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்! [QBR]
13. நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர். [QBR2] நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. [QBR]
14. உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள். [QBR2] அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள். [QBR]
15. ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள். [QBR2] தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள். [QBR]
16. கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார். [QBR2] ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள். [QBR]
17. தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார். [QBR2] தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார். [QBR]
18. வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது. [QBR2] எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். [QBR]
19. மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார். [QBR2] பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார். [QBR]
20. சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார். [QBR2] மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார். [QBR]
21. அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள். [QBR2] அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள். [QBR]
22. தேசங்கள் ஒருமித்துச் சேரும். [QBR2] அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
23. என் ஆற்றல் என்னை விட்டகன்றது. [QBR2] என் ஆயுள் குறைந்தது. [QBR]
24. எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும். [QBR2] தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர். [QBR]
25. பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர். [QBR2] உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்! [QBR]
26. உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர். [QBR2] அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும். [QBR] ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர். [QBR2] அவையெல்லாம் மாறிப்போகும். [QBR]
27. ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை. [QBR2] நீர் என்றென்றும் வாழ்வீர்! [QBR]
28. நாங்கள் இன்று உமது பணியாட்கள். [QBR2] நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள். [QBR2] அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன். [PE]