1. {#2துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளைக் கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது. } [QS]கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். [QE][QS2]உதவிக்காக நான் கதறும்போது கவனியும். [QE]
2. [QS]கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும். [QE][QS2]உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும். [QE]
3. [QS]என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது. [QE][QS2]எரிந்துபோகும் நெருப்பைப்போல் என் வாழ்க்கை உள்ளது. [QE]
4. [QS]என் வலிமை போயிற்று. [QE][QS2]நான் உலர்ந்து மடியும் புல்லைப் போலிருக்கிறேன். [QE][QS2]நான் என் உணவை உட்கொள்வதற்கும் மறந்து போகிறேன். [QE]
5. [QS]என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது. [QE]
6. [QS]பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன். [QE][QS2]பாழடைந்த பழைய கட்டிடங்களில் வாழும் ஆந்தையைப் போல் நான் தனித்திருக்கிறேன். [QE]
7. [QS]என்னால் தூங்க இயலவில்லை. [QE][QS2]கூரையின் மேலிருக்கும் தனித்த பறைவையைப் போல் உள்ளேன். [QE]
8. [QS]என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள். [QE][QS2]அவர்கள் என்னைக் கேலி பண்ணி சாபமிடுகிறார்கள். [QE]
9. [QS]என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது. [QE][QS2]என் பானங்களில் என் கண்ணீர் விழுகிறது. [QE]
10. [QS]ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர். [QE][QS2]நீர் என்னைத் தூக்கியெடுத்தீர், பின்பு நீர் என்னைத் தூர எறிந்துவிட்டீர். [QE][PBR]
11. [QS]பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது. [QE][QS2]நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன். [QE]
12. [QS]ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்! [QE][QS2]உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்! [QE]
13. [QS]நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர். [QE][QS2]நீர் சீயோனிடம் இரக்கமாயிருக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. [QE]
14. [QS]உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் எருசலேமின் தூசியைக்கூட நேசிக்கிறார்கள். [QE]
15. [QS]ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள். [QE][QS2]தேவனே, பூமியின் எல்லா அரசர்களும் உம்மைப் பெருமைப்படுத்துவார்கள். [QE]
16. [QS]கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார். [QE][QS2]ஜனங்கள் மீண்டும் அதன் மகிமையைக் காண்பார்கள். [QE]
17. [QS]தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார். [QE][QS2]தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார். [QE]
18. [QS]வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது. [QE][QS2]எதிர்காலத்தில் அந்த ஜனங்கள் கர்த்தரைத் துதிப்பார்கள். [QE]
19. [QS]மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார். [QE][QS2]பரலோகத்திலிருந்து கர்த்தர் பூமியைக் கீழே நோக்கிப் பார்ப்பார். [QE]
20. [QS]சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார். [QE][QS2]மரண தண்டனை பெற்ற ஜனங்களை அவர் விடுவிப்பார். [QE]
21. [QS]அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள். [QE][QS2]அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள். [QE]
22. [QS]தேசங்கள் ஒருமித்துச் சேரும். [QE][QS2]அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும். [QE][PBR]
23. [QS]என் ஆற்றல் என்னை விட்டகன்றது. [QE][QS2]என் ஆயுள் குறைந்தது. [QE]
24. [QS]எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும். [QE][QS2]தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர். [QE]
25. [QS]பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர். [QE][QS2]உமது சொந்தக் கைகளால் நீர் வானத்தை உண்டாக்கினீர்! [QE]
26. [QS]உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர். [QE][QS2]அவை ஆடையைப்போன்று கிழிந்து போகும். [QE][QS]ஆடையைப் போன்று நீர் அவற்றை மாற்றுகிறீர். [QE][QS2]அவையெல்லாம் மாறிப்போகும். [QE]
27. [QS]ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை. [QE][QS2]நீர் என்றென்றும் வாழ்வீர்! [QE]
28. [QS]நாங்கள் இன்று உமது பணியாட்கள். [QE][QS2]நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள். [QE][QS2]அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன். [QE]