தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2தாவீதின் ஒரு சங்கீதம் } [QS]நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன். [QE][QS2]கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன். [QE]
2. [QS]நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். [QE][QS2]என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். [QE][QS2]கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர். [QE]
3. [QS]என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன். [QE][QS2]ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன். [QE][QS2]நான் அதைச் செய்யமாட்டேன்! [QE]
4. [QS]நான் நேர்மையாக இருப்பேன். [QE][QS2]நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன். [QE]
5. [QS]யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன். [QE][QS2]நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன். [QE][PBR]
6. [QS]நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன். [QE][QS2]அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன். [QE][QS2]பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும். [QE]
7. [QS]பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன். [QE][QS2]என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன். [QE]
8. [QS]இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன். [QE][QS2]கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 101 / 150
தாவீதின் ஒரு சங்கீதம் 1 நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன். கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன். 2 நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர். 3 என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன். ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன். நான் அதைச் செய்யமாட்டேன்! 4 நான் நேர்மையாக இருப்பேன். நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன். 5 யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன். நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன். 6 நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன். அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன். பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும். 7 பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன். என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன். 8 இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன். கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 101 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References