1. {நன்றி கூறும் பாடல்} [PS] பூமியே, கர்த்தரைப் பாடு. [QBR]
2. கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! [QBR2] மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்! [QBR]
3. கர்த்தரே தேவனென்று அறியுங்கள். [QBR2] அவரே நம்மை உண்டாக்கினார். [QBR2] நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள். [QBR]
4. நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். [QBR2] துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். [QBR2] அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள். [QBR]
5. கர்த்தர் நல்லவர். [QBR2] அவர் அன்பு என்றென்றும் உள்ளது. [QBR2] என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும். [PE]