1. கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்? [QBR2] தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது. [QBR]
2. பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள். [QBR2] அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள். [QBR]
3. தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள். [QBR2] பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாகக் கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள். [QBR]
4. தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள். [QBR2] தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள். [QBR]
5. தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள். [QBR2] அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. [*அவர்கள்...கவனிப்பதில்லை எழுத்தின் பிரகாரமாக, “உமது நீதி அவனை காட்டிலும் உயரமாயிருக்கிறது” எனப் பொருள்படும்.] [QBR2] தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள். [QBR]
6. தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். [QBR2] அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள். [QBR]
7. அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள். [QBR2] அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள். [QBR]
8. அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள். [QBR2] ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள். [QBR2] ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள். [QBR]
9. மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள். [QBR2] ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள். [QBR]
10. மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள். [QBR]
11. எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார். [QBR2] நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!” [QBR2] என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.
12. கர்த்தாவே, எழுந்து செயல்படும்! [QBR2] தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! [QBR2] ஏழைகளை மறவாதேயும்!
13. தீயோர் தேவனுக்கு எதிராவார்கள். [QBR2] ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள். [QBR]
14. கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர். [QBR2] அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்! [QBR] தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள். [QBR2] கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர். [QBR2] எனவே அவர்களுக்கு உதவும்!
15. கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும். [QBR]
16. உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும். [QBR2] அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள். [QBR]
17. கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர். [QBR2] அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும். [QBR]
18. கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும். [QBR2] துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும். [QBR2] தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும். [PE]