1. [QS]கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்? [QE][QS2]தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது. [QE]
2. [QS]பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள். [QE]
3. [QS]தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள். [QE][QS2]பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாகக் கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள். [QE]
4. [QS]தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள். [QE][QS2]தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள். [QE]
5. [QS]தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள். [QE][QS2]அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை.[* அவர்கள்...கவனிப்பதில்லை எழுத்தின் பிரகாரமாக, “உமது நீதி அவனை காட்டிலும் உயரமாயிருக்கிறது” எனப் பொருள்படும். ] [QE][QS2]தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள். [QE]
6. [QS]தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். [QE][QS2]அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள். [QE]
7. [QS]அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள். [QE][QS2]அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள். [QE]
8. [QS]அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள். [QE][QS2]ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள். [QE][QS2]ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள். [QE]
9. [QS]மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள். [QE][QS2]ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள். [QE]
10. [QS]மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள். [QE]
11. [QS]எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார். [QE][QS2]நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!” [QE][QS2]என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள். [QE][PBR]
12. [QS]கர்த்தாவே, எழுந்து செயல்படும்! [QE][QS2]தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! [QE][QS2]ஏழைகளை மறவாதேயும்! [QE][PBR]
13. [QS]தீயோர் தேவனுக்கு எதிராவார்கள். [QE][QS2]ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள். [QE]
14. [QS]கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர். [QE][QS2]அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்! [QE][QS]தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள். [QE][QS2]கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர். [QE][QS2]எனவே அவர்களுக்கு உதவும்! [QE][PBR]
15. [QS]கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும். [QE]
16. [QS]உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும். [QE][QS2]அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள். [QE]
17. [QS]கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர். [QE][QS2]அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும். [QE]
18. [QS]கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும். [QE][QS2]துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும். [QE][QS2]தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும். [QE]