1. {#1புத்தகம் 1 (சங்கீதம் 1-41) } {#1சங்கீதம் } [QS]தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும், [QE][QS2]தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான். [QE]
2. [QS]ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான். [QE][QS2]அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான். [QE]
3. [QS]அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான். [QE][QS2]தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான். [QE][QS]உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான். [QE][QS2]அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான். [QE][PBR]
4. [QS]ஆனால் தீயோர் அப்படியிரார்கள். [QE][QS2]அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள். [QE]
5. [QS]ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள். [QE][QS2]அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள். [QE]
6. [QS]ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]தீயோரை அவர் அழிக்கிறார். [QE][PBR]