1. {#1ஞானம் ஒரு நல்ல பெண் } [QS]கவனியுங்கள்! ஞானமும், அறிவும் [QE][QS2]கவனிக்கும்படி உங்களை அழைக்கின்றன. [QE]
2. [QS]அவை, மலையின் உச்சிமீது நிற்கின்றன. [QE][QS2]சாலையின் பக்கத்தில், பாதைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கின்றது. [QE]
3. [QS]அவை நகர வாசல்களின் அருகில் உள்ளன. [QE][QS2]திறந்த கதவுகளின் வெளியே அவை அழைக்கின்றன. [QE]
4. [QS]ஞானம் சொல்கிறதாவது: “ஜனங்களே, உங்களை நோக்கி அழைக்கிறேன். [QE][QS2]நான் எல்லா ஜனங்களையும் அழைக்கிறேன். [QE]
5. [QS]நீங்கள் முட்டாள்களாக இருந்தால், ஞானவான்களாகக் கற்றுக்கொள்ளுங்கள். [QE][QS2]முட்டாள் மனிதர்களே, புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுங்கள். [QE]
6. [QS]கவனியுங்கள், நான் கற்றுத்தருபவை முக்கியமானவை [QE][QS2]நான் சரியானவற்றையே உங்களுக்குச் சொல்லுகிறேன். [QE]
7. [QS]எனது வார்த்தைகள் உண்மையானவை. [QE][QS2]நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன். [QE]
8. [QS]நான் சொல்வதெல்லாம் சரியானவை. [QE][QS2]என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை. [QE]
9. [QS]புரிந்துகொள்ளும் திறமை உடையவர்களுக்கு என் வார்த்தைகள் அனைத்தும் தெளிவானவை. [QE][QS2]அறிவுள்ள ஒருவன் இதனைப் புரிந்துகொள்வான். [QE]
10. [QS]ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. [QE][QS2]இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது. [QE]
11. [QS]ஞானமானது முத்துக்களைவிட மதிப்புமிக்கது. [QE][QS2]ஒருவன் விரும்புகிற அனைத்துப் பொருட்களையும்விட இது மிகவும் மதிப்புடையது” [QE][MS]என்று ஞானம் கூறுகிறது. [ME]
12. [QS]நான் ஞானம். நான் நல்ல தீர்ப்புகளோடு வாழ்கிறேன். [QE][QS2]நீ என்னை அறிவாலும் நல்ல தீர்மானங்களாலும் கண்டுக்கொள்ள முடியும். [QE]
13. [QS]ஒருவன் கர்த்தரை மதிக்கும்போது அவன் தீய வைகளை வெறுக்கிறான். [QE][QS2]ஞானமாகிய நான் பெருமையை வெறுக்கிறேன். [QE][QS]மற்றவர்களைவிட தன்னைப் பெரியவனாக நினைப்பவர்களையும் நான் வெறுக்கிறேன். [QE][QS2]நான் தீய வழிகளையும், பொய்சொல்லும் வாய்களையும் வெறுக்கிறேன். [QE]
14. [QS]ஆனால் ஞானமாகிய நான் ஜனங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்கும் திறமைகளையும் நல்ல தீர்ப்புகளையும் வழங்குகிறேன். [QE][QS2]நான் புரிந்துகொள்ளும் வல்லமையும் கொடுக்கிறேன். [QE]
15. [QS]அரசர்கள் ஞானமாகிய என்னை ஆட்சிக்குப் பயன்படுத்துவார்கள். [QE][QS2]ஆளுபவர்கள் என்னை நியாயமான சட்டங்களை ஏற்படுத்தப் பயன்படுத்துவார்கள். [QE]
16. [QS]பூமியில் உள்ள ஒவ்வொரு நல்ல ஆட்சியாளனும் என்னைப் பயன்படுத்தி [QE][QS2]தனக்குக் கட்டுப்பட்ட ஜனங்களை ஆளுகிறான். [QE]
17. [QS]என்னை நேசிக்கிற ஜனங்களை ஞானமாகிய நான் நேசிக்கிறேன். [QE][QS2]என்னை கண்டுக்கொள்ள ஜனங்கள் கடுமையாக முயற்சித்தால் அவர்கள் கண்டுக்கொள்வார்கள். [QE]
18. [QS]ஞானமாகிய என்னிடமும் கொடுப்பதற்கென்று செல்வமும் மதிப்பும் உள்ளன. [QE][QS2]நான் உண்மையான செல்வத்தையும் வெற்றியையும் தருவேன். [QE]
19. [QS]நான் தருகின்ற பொருட்கள் சிறந்த பொன்னைவிட உயர்ந்தவை. [QE][QS2]எனது அன்பளிப்புகள் சுத்தமான வெள்ளியைவிட உயர்ந்தவை. [QE]
20. [QS]ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். [QE][QS2]நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன். [QE]
21. [QS]என்னை நேசிக்கின்றவர்களுக்கு நான் செல்வத்தைத் தருவேன். [QE][QS2]ஆம், அவர்களின் வீட்டைக் களஞ்சியத்தால் நிரப்புவேன். [QE]
22. [QS]நீண்டகாலத்துக்கு முன், துவக்கத்தில் [QE][QS2]முதலாவதாக ஞானமாகிய நானே படைக்கப்பட்டேன். [QE]
23. [QS]ஞானமாகிய நான் துவக்கத்தில் உருவாக்கப்பட்டேன். [QE][QS2]உலகம் படைக்கப்படும் முன்னே நான் படைக்கப்பட்டேன். [QE]
24. [QS]ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன். [QE][QS2]நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன். [QE]
25. [QS]ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள். [QE][QS2]நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன். [QE]
26. [QS]கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன். [QE][QS2]நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன். [QE]
27. [QS]கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். [QE][QS2]கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன். [QE]
28. [QS]கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன். [QE][QS2]கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன். [QE]
29. [QS]கடல்களில் தண்ணீரின் அளவைக் கர்த்தர் நிர்ணயித்தபோதே நான் அங்கிருந்தேன். [QE][QS2]தண்ணீரானது கர்த்தருடைய அனுமதியின்றி உயர்ந்திட முடியாது. [QE][QS]கர்த்தர் உலகத்தின் அஸ்திபாரத்தை உண்டாக்கிய போது நான் அங்கிருந்தேன். [QE]
30. [QS]நான் அவரது அருகில் திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன். [QE][QS2]கர்த்தர் என்னால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைந்தார். [QE][QS2]நான் அவரை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு சிரிக்கச் செய்தேன். [QE]
31. [QS]தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார். [QE][QS2]அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார். [QE]
32. [QS]“குழந்தைகளே! இப்பொழுது நான் சொல்வதை கவனியுங்கள். [QE][QS2]நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம். [QE][QS2]ஆனால் எனது வழிகளைப் பின்பற்ற வேண்டும். [QE]
33. [QS]எனது போதனைகளைக் கேட்டு ஞானம் பெறுங்கள். [QE][QS2]அதைக் கவனிக்க மறுக்காதீர்கள். [QE]
34. [QS]என்னைக் கவனிக்கிற எவனும் மகிழ்ச்சியாக இருப்பான். [QE][QS2]அவன் ஒவ்வொரு நாளும் என் வழிகளைக் கவனிப்பான். [QE][QS2]அவன் என் வழியருகில் காத்திருப்பான். [QE]
35. [QS]என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான். [QE][QS2]அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான். [QE]
36. [QS]ஆனால் எனக்கு எதிராகப் பாவம் செய்கிறவன் தன்னையே புண்படுத்திக்கொள்கிறான். [QE][QS2]என்னை வெறுக்கிற அனைவரும் மரணத்தை விரும்புகிறார்கள்.” [QE]