1. {#1நினிவே அழிக்கப்படும் } [QS]ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான். [QE][QS2]எனவே உன் நகரத்தின் வலிமையான பகுதிகளைக் காவல் செய். [QE][QS2]சாலைகளைக் காவல் காத்திடு. [QE][QS]போருக்குத் தயாராக இரு. [QE][QS2]யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய். [QE]
2. [QS]ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார். [QE][QS2]இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும். [QE][QS]பகைவன் அவற்றை அழித்தான். [QE][QS2]அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான். [QE][PBR]
3. [QS]அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது. [QE][QS2]அவர்களின் சீருடைகள் பிரகாசமான சிவப்பாக உள்ளது. [QE][QS]அவர்களின் இரதங்கள் போருக்கு வரிசையாக உள்ளன, [QE][QS2]நெருப்பின் ஜூவாலையைப் போன்று மின்னுகின்றன. [QE][QS2]அவர்களின் குதிரைகள் போவதற்கு தயாராக உள்ளன. [QE]
4. [QS]அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன. [QE][QS2]தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன. [QE][QS]அவை எரியும் பந்தங்களைப் போன்றும், [QE][QS2]அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன. [QE][PBR]
5. [QS]விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான். [QE][QS2]ஆனால் அவர்கள் மதிற்சுவரை நோக்கி ஓடி, [QE][QS]அங்குள்ள சுவர்களைத் தகர்க்கும் கருவியின்மேல் [QE][QS2]அவர்களின் கேடயத்தை நிறுவுகிறார்கள். [QE]
6. [QS]ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன. [QE][QS2]எதிரிகள் அவ்வழியாக வந்து அரசனின் வீட்டை அழிக்கிறார்கள். [QE]
7. [QS]பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள். [QE][QS2]அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள். [QE][QS2]அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள். [QE][PBR]
8. [QS]நினிவே, தண்ணீர் வற்றிப்போன [QE][QS2]குளத்தைப்போன்று இருக்கிறது. [QE][QS]ஜனங்கள், “நிறுத்துங்கள்! ஓடுவதை நிறுத்துங்கள்!” என்று சொன்னார்கள். [QE][QS2]ஆனால் அது பயன் தரவில்லை. [QE][PBR]
9. [QS]நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்! [QE][QS2]தங்கத்தை எடுங்கள்! [QE][QS]அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன. [QE][QS2]அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன. [QE]
10. [QS]இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது. [QE][QS2]எல்லாம் திருடப்பட்டன. [QE][QS2]நகரம் அழிக்கப்பட்டது. [QE][QS]ஜனங்கள் தங்கள் தைரியத்தை இழந்தனர். [QE][QS2]அவர்களது இதயங்கள் அச்சத்தால் உருகின. [QE][QS]அவர்களது முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன, [QE][QS2]அவர்களது உடல்கள் நடுங்குகின்றன, முகங்கள் அச்சத்தால் வெளுத்தன. [QE][PBR]
11. [QS]இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே? [QE][QS2]ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் அங்கே வாழ்ந்தன. [QE][QS2]அவற்றின் குட்டிகள் அஞ்சவில்லை. [QE]
12. [QS]சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும் [QE][QS2]உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது. [QE][QS]அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது. [QE][QS2]அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது. [QE][PBR]
13. [QS]சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: [QE][QS2]“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். [QE][QS]நான் உனது இரதங்களை எரிப்பேன், உனது ‘இளஞ்சிங்கங்களைப்’ போரில் கொல்வேன். [QE][QS2]நீ இந்த பூமியில் மீண்டும் எவரையும் வேட்டையாடமாட்டாய். [QE][QS2]ஜனங்கள் உனது தூதுவர்களிடமிருந்து மீண்டும் கெட்ட செய்திகளைக் கேட்கமாட்டார்கள்.” [QE]