1. இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின் [PE][PS] தரிசனம். இது நினிவே நகரத்தைப் பற்றிய துயரமான இறைவாக்கு.
2. {கர்த்தர் நினிவே மேல் கோபமாயிருக்கிறார்} [PS] கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார். [QBR2] கர்த்தர் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறவரும், [QBR2] மிகவும் கோபமானவருமாயிருக்கிறார்! [QBR] கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கிறார். [QBR2] அவர் தனது பகைவர்கள் மீது கோபத்தை வைத்திருக்கிறார். [QBR]
3. கர்த்தர் பொறுமையானவர். [QBR2] ஆனால் அவர் வல்லமையுடையவராகவும் இருக்கிறார். [QBR] கர்த்தர் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பார். [QBR2] அவர் அவர்களை விடுதலை பெற விடமாட்டார். [QBR] கர்த்தர் தீயவர்களைத் தண்டிக்க வந்துக்கொண்டிருக்கிறார். [QBR2] அவர் தமது ஆற்றலைக் காட்டுவதற்காகப் புயலையும் சுழற்காற்றையும் பயன்படுத்துவார். [QBR] ஒரு மனிதன் தரையின் மேலும் புழுதியின் மேலும் நடக்கிறான். [QBR2] ஆனால் கர்த்தரோ மேகங்களின்மேல் நடக்கிறார். [QBR]
4. கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார் அது வறண்டுப்போகும். [QBR2] அவர் அனைத்து ஆறுகளையும் வற்றச்செய்வார். [QBR] வளமான நிலமுடைய பாசானும் கர்மேலும் வறண்டுப்போகும். [QBR2] லீபனோனின் மலர்கள் வாடிப்போகும். [QBR]
5. கர்த்தர் வருவார், [QBR2] குன்றுகள் அச்சத்தால் நடுங்கும், [QBR2] மலைகள் உருகிப்போகும். [QBR] கர்த்தர் வருவார், பூமி அச்சத்தால் நடுங்கும். [QBR2] உலகமும் அதிலுள்ள ஒவ்வொருவரும் அச்சத்தால் நடுங்குவார்கள். [QBR]
6. கர்த்தருடைய பெருங்கோபத்திற்கு எதிராக எவரும் நிற்கமுடியாது. [QBR2] எவராலும் அவரது பயங்கரக் கோபத்தைத் தாங்க முடியாது. [QBR] அவரது கோபம் நெருப்பைப்போன்று எரியும். [QBR2] அவர் வரும்போது கல்மலைகள் பேர்க்கப்படும். [QBR]
7. கர்த்தர் நல்லவர். [QBR2] அவர் இக்கட்டான காலங்களில் நாம் செல்லக்கூடிய பாதுகாப்பான இடம். [QBR2] அவர் தன்னை நம்புகிறவரைக் கவனிக்கிறார். [QBR]
8. ஆனால் அவர் அவரது எதிரிகளை முழுவதுமாக அழிப்பார். [QBR2] அவர் ஒரு வெள்ளத்தைப்போன்று அவர்களை அழிப்பார். [QBR2] அவர் தமது எதிரிகளை இருளுக்குள் துரத்துவார். [QBR]
9. நீங்கள் ஏன் கர்த்தருக்கு எதிராகத் திட்டமிடுகிறீர்கள். [QBR2] அவர் முழுமையான அழிவைக் கொண்டுவருவார், [QBR2] எனவே நீங்கள் மீண்டும் துன்பங்களுக்கு காரணராகமாட்டீர்கள். [QBR]
10. முட்செடிகள் பானையின் கீழ் எரிந்து அழிவது போல [QBR2] நீங்கள் முற்றிலும் அழிக்கப்படுவீர்கள். [QBR] காய்ந்துப்போன பதர் வேகமாக எரிவதுப்போன்று [QBR2] நீங்கள் வெகு விரைவாக அழிக்கப்படுவீர்கள்.
11. அசீரியாவே, உன்னிடமிருந்து ஒரு மனிதன் வந்தான். [QBR] அவன் கர்த்தருக்கு எதிராகத் தீயவற்றை திட்டமிட்டான். [QBR2] அவன் தீய ஆலோசனைகளைத் தந்தான். [QBR]
12. கர்த்தர் யூதாவுக்கு இதனைச் சொன்னார்: [QBR] “அசீரியாவின் ஜனங்கள் முழுபலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். [QBR2] ஆனால் அவர்கள் அனைவரும் வெட்டி எறியப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முறியடிக்கப்படுவார்கள். [QBR] என் ஜனங்களே, நான் உங்களைத் துன் புறுத்தினேன். [QBR2] ஆனால் நான் இனிமேல் உங்களைத் துன்புறுத்தமாட்டேன். [QBR]
13. இப்பொழுது நான் உங்களை அசீரியாவின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்வேன். [QBR2] நான் உங்கள் கழுத்தில் உள்ள அந்த நுகத்தை எடுப்பேன். [QBR2] நான் உங்களைக் கட்டியிருக்கிற சங்கிலிகளை அறுப்பேன்.”
14. அசீரியாவின் அரசனே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்: [QBR2] “உன் பெயரை வைத்துக்கொள்ள சந்ததியார் யாரும் உனக்கு இருக்கமாட்டார்கள். [QBR] நான் உன் தெய்வங்களின் ஆலயங்களில் உள்ள செதுக்கப்பட்ட [QBR2] விக்கிரகங்களையும் உலோகச் சிலைகளையும் அழிப்பேன். [QBR] நான் உனக்காக உனது கல்லறையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். [QBR2] உனது முடிவு விரைவில் வர இருக்கிறது.”
15. யூதாவே, பார்! [QBR2] அங்கே பார், குன்றுகளுக்கு மேல் வருவதைப் பார். [QBR2] இங்கே நல்ல செய்தியைத் தாங்கிக்கொண்டு தூதுவன் வருகிறான். [QBR2] அங்கே சமாதானம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான். [QBR] யூதாவே, உனது விடுமுறை நாட்களைக் கொண்டாடு. [QBR2] யூதாவே, நீ வாக்களித்தவற்றைச் செய். [QBR] தீய ஜனங்கள் உன்னை மீண்டும் தாக்கித் தோற்கடிக்கமாட்டார்கள். [QBR2] ஏனெனில் அந்தத் தீய ஜனங்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். [PE]