1. {#1மீகா ஜனங்கள் செய்த பாவங்களால் கலக்கமடைந்தான் } [QS]நான் கலக்கமடைந்தேன். [QE][QS2]ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன். [QE][QS2]பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன். [QE][QS]உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும். [QE][QS2]நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும். [QE]
2. [QS]நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள். [QE][QS2]நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை. [QE][QS]ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர். [QE][QS2]ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர். [QE]
3. [QS]ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள். [QE][QS2]அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள். [QE][QS]வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள். [QE][QS2]“முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள். [QE]
4. [QS]அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர். [QE][QS2]அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள். [QE]{#1தண்டனை நாள் வருகிறது } [QS]இந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். [QE][QS2]உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது. [QE][QS]இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். [QE][QS2]இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள். [QE]
5. [QS]உங்களது அயலாரை நம்பாதீர்கள். நண்பர்களை நம்பாதீர்கள். [QE][QS2]உங்கள் மனைவியிடமும் உண்மையைப் பேசாதீர்கள். [QE]
6. [QS]ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள். [QE][QS2]ஒரு மகன் அவனது தந்தையை மதிக்கமாட்டான். [QE][QS]ஒரு மகள் தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள். [QE][QS2]ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள். [QE]
7. {#1கர்த்தரே இரட்சகர் } [QS]எனவே, நான் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டுவேன். [QE][QS2]நான், தேவன் என்னைக் காப்பாற்றுவார் எனக் காத்திருந்தேன். [QE][QS2]என் தேவன் நான் சொல்வதைக் கேட்பார். [QE]
8. [QS]நான் விழுந்திருக்கிறேன். [QE][QS2]ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே, நான் மீண்டும் எழுந்திருப்பேன். [QE][QS]நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன். [QE][QS2]ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார். [QE]
9. {#1கர்த்தர் மன்னிக்கிறார் } [QS]நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன். [QE][QS2]எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார். [QE][QS]ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார். [QE][QS2]அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார். [QE][QS]பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வருவார். [QE][QS2]அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன். [QE]
10. [QS]என் எதிரி என்னிடம், [QE][QS2]“உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள். [QE][QS]ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள். [QE][QS2]அவள் அவமானம் அடைவாள். [QE][QS]அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன். [QE][QS2]ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ள புழுதியைப் போன்று நடப்பார்கள். [QE]
11. {#1திரும்புகிற யூதர்கள் } [QS]காலம் வரும், உங்களது சுவர்கள் மீண்டும் கட்டப்படும். [QE][QS2]அந்த நேரத்தில் நாடு வளரும். [QE]
12. [QS]உனது ஜனங்கள் உன் நட்டிற்க்குத் திரும்புவார்கள். [QE][QS2]அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள். [QE][QS]உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும் [QE][QS2]ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும் வருவார்கள். [QE][QS]அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும் [QE][QS2]கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள். [QE][PBR]
13. [QS]அந்த நிலமானது அங்கு வாழ்ந்த ஜனங்களின் [QE][QS2]தீய செயல்களால் அழிக்கப்பட்டது. [QE]
14. [QS]எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய். [QE][QS2]உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீ ஆட்சிசெய். [QE][QS]அக்கூட்டம் காடுகளிலும், [QE][QS2]கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது. [QE][QS]பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள் [QE][QS2]முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக. [QE]
15. {#1இஸ்ரவேல் பகைவர்களை வெல்லும் } [QS]நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு வரும்போது பல அற்புதங்களைச் செய்தேன். [QE][QS2]நான் அவற்றைப் போன்று நீங்கள் பல அற்புதங்களைப் பார்க்கும்படிச் செய்வேன். [QE]
16. [QS]அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும். [QE][QS2]அவர்கள் அவமானம் அடைவார்கள். [QE][QS]அவர்களின் “வல்லமை” என்னோடு ஒப்பிட இயலாது [QE][QS2]என்பதை அவர்கள் காண்பார்கள். [QE][QS]அவர்கள் ஆச்சரியத்தோடு [QE][QS2]தமது கைகளை வாயில் வைத்துக்கொள்வார்கள். [QE][QS]அவர்கள் கவனிக்க மறுத்து [QE][QS2]தங்கள் காதுகளை மூடிக்கொள்வார்கள். [QE]
17. [QS]அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள். [QE][QS2]அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். [QE][QS]அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப் போன்று [QE][QS2]வெளியேவந்து தேவனாகிய கர்த்தரை அடைவார்கள். [QE][QS]தேவனே, அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள். [QE]
18. {#1கர்த்தருக்குத் துதி } [QS]உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை. [QE][QS2]ஜனங்களின் குற்றங்களை நீர் அகற்றிவிடுகிறீர். [QE][QS]தேவன் தமது சுதந்தரத்தில் மீதியானவர்களை மன்னிக்கிறார். [QE][QS2]தேவன் என்றென்றும் கோபத்தோடு இரார். ஏனென்றால் அவர் கருணையோடு இருப்பதில் மகிழ்கிறார். [QE]
19. [QS]தேவன், மீண்டும் திரும்பி வருவார், நமக்கு ஆறுதல் தருவார். [QE][QS2]நமது பாவங்களை, குற்றங்களை நீக்கி (நசுக்கி) எல்லாவற்றையும் ஆழமான கடலுக்குள் எறிந்துவிடுவார். [QE]
20. [QS]தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர். [QE][QS2]ஆபிரகாமிடம் உமது உண்மையையும், அன்பையும் காட்டுவீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி செய்யும். [QE]