1. [QS]இப்பொழுது வலிமையான நகரமே, உனது வீரர்களை கூட்டு. [QE][QS2]அவர்கள் நம்மைத் தாக்குவதற்கு நம்மை சுற்றி இருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் இஸ்ரவேலின் நீதிபதியைத் [QE][QS2]தன் தடியால் கன்னத்தில் அடிப்பார்கள். [QE]
2. {#1பெத்லேகேமில் மேசியா பிறப்பார் } [QS]எப்பிராத்தா என்று அழைக்கப்படும் பெத்லேகேமே, [QE][QS2]நீ தான் யூதாவிலேயே சிறிய நகரம். [QE][QS]உனது குடும்பம் எண்ண முடியாத அளவிற்குச் சிறியது, [QE][QS2]ஆனால் “இஸ்ரவேலை ஆள்பவர்” எனக்காக உங்களிடமிருந்து வருவார். [QE][QS]அவரது துவக்கங்கள் [QE][QS2]நீண்ட காலத்திற்கு முன்பாகவும் பழங்காலத்திலிருந்தும் இருக்கின்றன. [QE]
3. [QS]வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அரசனான குழந்தையை, [QE][QS2]அந்தப் பெண் பெற்றெடுக்கும்வரை கர்த்தர் தமது ஜனங்களை கைவிட்டுவிடுவார். [QE][QS]பிறகு மீதியுள்ள அவனது மற்ற சகோதரர்கள் [QE][QS2]இஸ்ரவேலுக்கு திரும்பி வருவார்கள். [QE]
4. [QS]பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர் நின்று மந்தைகளை மேய்ப்பார். [QE][QS2]அவர் அவர்களை கர்த்தருடைய ஆற்றலால், தேவனாகிய கர்த்தருடைய அற்புதமான நாமத்தால் அவர்களை வழிநடத்துவார். [QE][QS]ஆம், அவர்கள் சமாதானமாக வாழ்வார்கள். [QE][QS2]ஏனென்றால் அந்த நேரத்தில், அவரது மகிமை பூமியின் எல்லைவரை செல்லும். [QE]
[QS2]5. ஆமாம், நமது நாட்டிற்குள் அசீரியன் படை வரும். [QE][PBR] [QS]அப்படை நமது பெரிய வீடுகளை அழிக்கும். [QE][QS2]ஆனால், இஸ்ரவேலரின் [QE][QS]ஆள்பவர் ஏழு மேய்ப்பர்களையும் [QE][QS2]அவர் எட்டுத் தலைவர்களையும் தேர்ந்தெடுப்பார். [QE]
6. [QS]அவர்கள் தமது வாள்களைப் பயன்படுத்தி அசீரியர்களை ஆள்வார்கள். [QE][QS2]அவர்கள் கையில் வாள்களுடன் நிம்ரோதின் தேசத்தை ஆள்வார்கள். [QE][QS]அவர்கள் அந்த ஜனங்களை ஆள தமது வாள்களைப் பயன்படுத்துவார்கள். [QE][QS2]பின்னர் இஸ்ரவேலை ஆள்பவர், நமது நாட்டிற்குள் வந்து எல்லைகளையும் நிலங்களையும் வீடுகளை மிதிக்கும் அசீரியர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார். [QE]
7. [QS]பிறகு யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தரிடமிருந்து வருகிற பனியைப்போன்று ஜனங்களிடையே சிதறிப்போவர்கள். [QE][QS2]அவர்கள், புல்லின் மேல் விழுகிற பனியைப் போன்று ஜனங்களிடையே இருப்பார்கள். [QE][QS]அவர்கள் எவருக்காகவும் காத்திருக்கமாட்டார்கள். [QE][QS2]அவர்கள் எவருக்காகவும் எந்த மனிதன் மேலும் சார்ந்திருக்கமாட்டார்கள். [QE]
8. [QS]யாக்கோபிலே மீதமானவர்கள், [QE][QS2]காட்டு மிருகங்களிடையே உள்ள சிங்கத்தைப் போன்று பல தேசங்களிடையே இருப்பார்கள். [QE][QS]அவர்கள் ஆட்டு மந்தைகளிடையே உள்ள இளஞ்சிங்கத்தைப் போன்று இருப்பார்கள். [QE][QS2]சிங்கம் கடந்து போனாலும் அது தான் விரும்பிய இடத்துக்குப் போகும். [QE][QS]அது ஒரு மிருகத்தைத் தாக்கினால், [QE][QS2]எவராலும் அந்த மிருகத்தைக் காப்பாற்ற முடியாது. மீதமானவர்களும் அவ்வாறே இருப்பார்கள். [QE]
9. [QS]நீங்கள் உங்களது பகைவருக்கு எதிராகக் கைகளைத் தூக்கி [QE][QS2]அவர்களை அழிப்பீர்கள். [QE]
10. {#1ஜனங்கள் தேவனைச் சார்ந்திருப்பார்கள் } [QS]“நான் அந்த வேளையில் உங்கள் குதிரைகளை உங்களிடமிருந்து அபகரிப்பேன். [QE][QS2]நான் உங்கள் இரதங்களை அழிப்பேன். [QE]
11. [QS]நான் உங்கள் நாட்டிலுள்ள நகரங்களை அழிப்பேன். [QE][QS2]நான் உங்கள் கோட்டைகளையெல்லாம் நொறுக்குவேன். [QE]
12. [QS]நீங்கள் இனிமேல் சூன்ய வித்தைகளை செய்யமாட்டீர்கள். [QE][QS2]நீங்கள் இனிமேல் எதிர்காலத்தைப் பற்றி குறி சொல்லும் ஆட்களைப் பெற்றிருக்கமாட்டீர்கள். [QE]
13. [QS]நான் உங்களது அந்நிய தெய்வங்களின் உருவச் சிலைகளை உடைத்தெறிவேன். சிலைகளை அழிப்பேன். [QE][QS2]அந்நிய தெய்வங்களை நினைவுப்படுத்தும் கற்களை நான் உடைத்தெறிவேன். [QE][QS2]உங்கள் கைளால் செய்யப்பட்டவற்றை நீங்கள் வழிபடமாட்டீர்கள். [QE]
14. [QS]நான் உன் அஷ்ரா சிலைக் கம்பங்கள் வழிபடாதவாறு அழிப்பேன். [QE][QS2]நான் உனது அந்நிய தெய்வங்களை அழிப்பேன். [QE]
15. [QS]சில ஜனங்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். [QE][QS2]நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அந்த தேசங்களைப் பழிவாங்குவேன்.” [QE]