1. {#1ஜனங்களின் தீயத்திட்டங்கள் } [QS]பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத் [QE][QS2]துன்பங்கள் வரும். [QE][QS]அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள். [QE][QS]பிறகு காலை வெனிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். [QE][QS2]ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது. [QE]
2. [QS]அவர்கள் வயல்களை விரும்பினார்கள், [QE][QS2]எடுத்துக்கொண்டனர். [QE][QS]அவர்கள் வீடுகளை விரும்பினார்கள், [QE][QS2]அதை எடுத்துக்கொண்டனர். [QE][QS]அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது வீட்டை எடுத்தனர். [QE][QS2]அவர்கள் ஒரு மனிதனை ஏமாற்றி அவனது நிலத்தை எடுத்தனர். [QE]
3. {#1அந்த ஜனங்களைத் தண்டிக்கக் கர்த்தருடைய திட்டங்கள் } [QS]அதனால், கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: [QE][QS]“பார், நான் இந்தக் குடும்பத்திற்கு எதிராக துன்பத்தைக் கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். [QE][QS2]நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. [QE][QS]நீங்கள் வீண் பெருமைகொள்வதை விடுவீர்கள். [QE][QS2]ஏனென்றால் தீமைகள் வந்துகொண்டிருக்கின்றன. [QE]
4. [QS]பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பாட்டு இயற்றுவார்கள். [QE][QS2]ஜனங்கள் இந்தச் சோகப் பாடலைப் பாடுவார்கள்: [QE][QS]நாங்கள் அழிக்கப்படுகிறோம். [QE][QS2]கர்த்தர் எங்களது நிலத்தை எடுத்துக் அதனை மற்றவர்களுக்குக் கொடுத்தார். [QE][QS]ஆமாம், அவர் எனது நிலங்களை என்னிடமிருந்து எடுத்தார். [QE][QS2]கர்த்தர் நமது வயல்களைப் பகைவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். [QE]
5. [QS]எனவே நாம் நிலத்தை அளந்து, கர்த்தருடைய [QE][QS2]ஜனங்களுக்குள் பகிர்ந்துக்கொள்ள இயலாது.” [QE]
6. {#1பிரசங்கம் செய்ய வேண்டாம் என மீகா கேட்டுக்கொள்ளப்படுகிறான் } [QS]ஜனங்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்குப் பிரசங்கிக்க வேண்டாம். [QE][QS2]எங்களைப் பற்றிய அந்தத் தீயவற்றைச் சொல்லவேண்டாம். [QE][QS]எங்களுக்குத் தீயவை எதுவும் ஏற்படாது” [QE][PBR]
7. [QS]ஆனால் யாக்கோபின் ஜனங்களே, [QE][QS2]நான் இவற்றை கட்டாயம் சொல்ல வேண்டும். [QE][QS]கர்த்தர் அவரது பொறுமையை இழந்துக்கொண்டிருக்கிறார். [QE][QS2]ஏனென்றால் நீங்கள் தீமை செய்திருக்கிறீர்கள். [QE][QS]நீங்கள் சரியானபடி வாழ்ந்தால் [QE][QS2]பிறகு நான் உங்களிடம் இனிமையாகப் பேசமுடியும். [QE]
8. [QS]ஆனால் என் ஜனங்களுக்கு, அவர்கள் விரோதியைப்போல் ஆகிறார்கள். [QE][QS2]நீங்கள் கடந்து செல்லுகிறவர்களின் ஆடைகளைக் களவாடுகிறீர்கள். [QE][QS]அந்த ஜனங்கள் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக நினைக்கிறீர்கள். [QE][QS2]ஆனால் நீங்கள் அவர்களிடமிருந்து யுத்தத்தின் கைதிகளிடமிருந்து எடுப்பது போல பொருள்களைப் பறித்துக்கொள்கிறீர்கள். [QE]
9. [QS]நீங்கள் எனது ஜனங்களிலுள்ள பெண்களிடமிருந்து [QE][QS2]அழகான வீடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். [QE][QS]நீங்கள் எனது செல்வத்தை [QE][QS2]அவர்களின் சிறிய பிள்ளைகளிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். [QE]
10. [QS]எழுங்கள், புறப்பட்டுப்போங்கள். [QE][QS2]இது நீங்கள் ஓய்வெடுக்கும் இடமாக இராது. ஏனென்றால், இந்த இடத்தை நீங்கள் அழித்தீர்கள். [QE][QS]இதனை நீங்கள் அசுத்தம் செய்தீர்கள். எனவே, இது அழிக்கப்படும். [QE][QS2]இது பயங்கரமான அழிவாக இருக்கும். [QE][PBR]
11. [QS]இந்த ஜனங்கள், நான் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை. [QE][QS2]ஆனால் ஒருவன் பொய்களைச் சொல்லிக்கொண்டு வந்தால், அவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். [QE][QS]அவர்கள் ஒரு பொய் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொண்டு, அவன் வந்து, [QE][QS2]“அப்பொழுது வருங்காலம் நல்லகாலமாக தோன்றும், திராட்சைரசமும் மதுபானமும் ஏராளமாக கிடைக்கும்” என்று சொன்னதும் அவனையும் ஏற்றுக்கொள்வார்கள். [QE]
12. {#1கர்த்தர் தனது ஜனங்களை ஒன்று சேர்ப்பார் } [QS]ஆமாம், யாக்கோபின் ஜனங்களே, [QE][QS]நான் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். [QE][QS2]இஸ்ரவேலின் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரையும் நான் ஒன்று சேர்ப்பேன். [QE][QS]நான் அவர்களை ஆட்டு மந்தையில் உள்ள ஆடுகளைப்போன்றும் [QE][QS2]தொழுவத்தில் உள்ள மந்தைகளைப்போன்றும் [QE][QS]ஒன்று சேர்ப்பேன். [QE][QS2]பிறகு அந்த இடமானது அநேக ஜனங்களின் ஓசைகளால் நிறைந்திருக்கும். [QE]
13. [QS]“தடைகளை உடைப்பவர்” அவர்களை நடத்தி அவர்கள் முன்னே நடந்து செல்கிறார். [QE][QS2]அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் நுழைந்து கடந்து போவார்கள். [QE][QS]அவர்களின் அரசன் அவர்களின் முன்பு நடந்து போவான். [QE][QS2]கர்த்தர் அவரது ஜனங்களுக்கு முன்னால் இருப்பார். [QE]