1. {#1கர்த்தருக்கு ஒரு ஜெபம் } [QS]கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும். [QE][QS2]எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்! [QE]
2. [QS]எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று. [QE][QS2]எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. [QE]
3. [QS]நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம். [QE][QS2]எங்களுக்குத் தந்தை இல்லை. [QE][QS2]எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள். [QE]
4. [QS]நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது. [QE][QS2]நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது. [QE]
5. [QS]எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம். [QE][QS2]நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை. [QE]
6. [QS]நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். [QE][QS2]நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். [QE]
7. [QS]எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர். [QE][QS]இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள். [QE][QS2]இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம். [QE]
8. [QS]அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர். [QE][QS2]அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை. [QE]
9. [QS]நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம். [QE][QS2]வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர். [QE]
10. [QS]எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது. [QE][QS2]எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது. [QE]
11. [QS]பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர். [QE][QS2]யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர். [QE]
12. [QS]பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர். [QE][QS2]எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை. [QE]
13. [QS]பகைவர்கள் எங்கள் இளைஞர்களை [QE][QS2]எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர். [QE][QS]எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால் [QE][QS2]கீழே இடறி விழுந்தார்கள். [QE]
14. [QS]மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை. [QE][QS2]இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை. [QE]
15. [QS]எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை. [QE][QS2]எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது. [QE]
16. [QS]எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது. [QE][QS2]எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. [QE]
17. [QS]இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது. [QE][QS2]எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. [QE]
18. [QS]சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது. [QE][QS2]சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன. [QE]
19. [QS]ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர், [QE][QS2]உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும். [QE]
20. [QS]கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர். [QE][QS2]எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர். [QE]
21. [QS]கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும். [QE][QS2]நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம். [QE][QS2]எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும். [QE]
22. [QS]நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே. [QE][QS2]எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா? [QE]