1. {#1எருசலேம் மீதான தாக்குதலின் பயங்கரங்கள் } [QS]தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார். [QE][QS2]நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார். [QE][QS]எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன. [QE][QS2]ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன. [QE]
2. [QS]சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள். [QE][QS2]அவர்கள் தங்கத்தின் எடைக்குச் சமமான எடையுள்ளவர்களாக இருந்தனர். [QE][QS]ஆனால் இப்பொழுது பகைவர்கள் அந்த ஜனங்களை பழைய மண் பாத்திரங்களைப்போன்று கருதுகின்றனர். [QE][QS2]பகைவர்கள், குயவனால் செய்யப்பட்ட மண் பாத்திரங்களைப்போன்று இவர்களைக் கருதுகிறார்கள். [QE]
3. [QS]காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன. [QE][QS2]ஓநாய் கூடத் தன் குட்டிகள் மார்பில் பால் குடிக்கும்படிவிடும். [QE][QS]ஆனால் எனது ஜனங்களின் குமாரத்தியோ கொடூரமானவள். [QE][QS2]அவள் வனாந்தரத்தில் வாழும் நெருப்புக் கோழியைப் போன்றவள். [QE]
4. [QS]சிறு குழந்தைகளின் நாக்கானது, [QE][QS2]தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது. [QE][QS]சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள். [QE][QS2]ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை. [QE]
5. [QS]ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது, [QE][QS2]வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர். [QE][QS]மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள் [QE][QS2]இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள். [QE]
6. [QS]எனது ஜனங்களின் மகள்[* ஜனங்களின் மகள் எருசலேம் ஜனங்கள். ] [QE][QS2]செய்த பாவம் மிகப்பெரியது. [QE][QS]அவளின் பாவம் சோதோமும் கொமோராவும் [† சோதோம் மற்றும் கொமொரா இரு நகரங்கள் தம் பாவத்தால் தேவனால் அழிக்கப்பட்டது. ] [QE][QS2]செய்த பாவத்தை விடப் பெரியது. [QE][QS]சோதோமும் கொமோராவும் திடீரென அழிக்கப்பட்டது. [QE][QS2]எந்த மனிதனின் கையும் அழிவுக்கு காரணமாயிருக்க முடியவில்லை. [QE]
7. [QS]யூதாவிலுள்ள சில புருஷர்கள் [QE][QS2]விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர். [QE][QS]அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள். [QE][QS2]அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள். [QE][QS2]அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள். [QE][QS]அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை. [QE][QS2]அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன. [QE]
8. [QS]ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின. [QE][QS2]வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. [QE][QS]அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது. [QE][QS2]அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது. [QE]
9. [QS]வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள். [QE][QS2]பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள். [QE][QS]அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். [QE][QS2]அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர். [QE]
10. [QS]அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத் [QE][QS2]தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர். [QE][QS]அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று. [QE][QS2]என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது. [QE]
11. [QS]கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார். [QE][QS2]அவர் தனது கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார். [QE][QS]அவர் சீயோனில் ஒரு நெருப்பை உண்டாக்கினார். [QE][QS2]அந்த நெருப்பு சீயோனை அதன் அஸ்திபாரம்வரைக்கும் எரித்துபோட்டது. [QE]
12. [QS]பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது [QE][QS2]என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை. [QE][QS]உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை [QE][QS2]நம்ப முடியவில்லை. [QE][QS]பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக [QE][QS2]நுழைய முடியும் என்பதை அவர்களால் [QE][QS2]நம்ப முடியவில்லை. [QE]
13. [QS]எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த [QE][QS2]பாவத்தால் இது நிகழ்ந்தது. [QE][QS]எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த [QE][QS2]தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது. [QE][QS]எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள். [QE][QS2]நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள். [QE]
14. [QS]தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில் [QE][QS2]குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள். [QE][QS]அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள். [QE][QS2]அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர். [QE]
15. [QS]“வெளியே போ! வெளியே போ! [QE][QS2]எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர். [QE][QS]அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர். [QE][QS]அவர்களுக்கு வீடு இல்லை. [QE][QS2]மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர். [QE]
16. [QS]கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார். [QE][QS2]அதற்குப் பிறகு அவர்களை அவர் பாதுகாக்கவில்லை. [QE][QS]அவர் ஆசாரியர்களை மதிக்கவில்லை. [QE][QS2]யூதாவிலுள்ள மூப்பர்களுடன் அவர் சிநேகம் வைக்கவில்லை. [QE]
17. [QS]நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று. [QE][QS2]ஆனால் எந்த உதவியும் வரவில்லை. [QE][QS]எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். [QE][QS2]நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். [QE][QS2]ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை. [QE]
18. [QS]எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள். [QE][QS2]எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை. [QE][QS]எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது. [QE][QS2]எங்கள் முடிவு வந்தது! [QE]
19. [QS]எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர். [QE][QS2]அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள். [QE][QS]எங்களைப் பிடிப்பதற்காக [QE][QS2]அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர். [QE]
20. [QS]அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான். [QE][QS]எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான். [QE][QS2]ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான். [QE][QS]இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். [QE][QS2]அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம். [QE][QS2]அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம். [QE]
21. [QS]ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள். [QE][QS2]ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள். [QE][QS]ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும். [QE][QS]நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய். [QE][QS2]உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய். [QE]
22. [QS]சீயோனே, உனது தண்டனை முடிந்தது. [QE][QS2]நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய். [QE][QS]ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார். [QE][QS2]அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார். [QE]