1. {#1துன்பங்களின் அர்த்தம் } [QS]நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன். [QE][QS]கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார். [QE][QS2]நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்! [QE]
2. [QS]கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல [QE][QS2]இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார். [QE]
3. [QS]கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார். [QE][QS2]அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார். [QE]
4. [QS]அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார். [QE][QS2]அவர் எனது எலும்புகளை உடைத்தார். [QE]
5. [QS]கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார். [QE][QS2]அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார். [QE]
6. [QS]அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார். [QE][QS2]நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார். [QE]
7. [QS]கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார். [QE][QS]என்னால் வெளியே வரமுடியவில்லை. [QE][QS2]அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார். [QE]
8. [QS]நான் கதறினாலும் உதவி கேட்டாலும் [QE][QS2]கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை. [QE]
9. [QS]அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார். [QE][QS2]அவர் எனது பாதையைக் கோணலாக்கினார். [QE]
10. [QS]கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார். [QE][QS2]அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார். [QE]
11. [QS]கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார். [QE][QS2]அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார். [QE][QS2]அவர் என்னை பாழாக்கினார். [QE]
12. [QS]அவர் தனது வில்லை தயார் செய்தார். [QE][QS2]அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார். [QE]
13. [QS]அவர் தனது அம்பை என்னுடைய [QE][QS2]வயிற்றில் எய்தார். [QE]
14. [QS]நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன். [QE][QS2]நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள். [QE]
15. [QS]கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார். [QE][QS2]அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார். [QE]
16. [QS]கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார். [QE][QS2]அவர் என்னைத் தூசியில் தள்ளினார். [QE]
17. [QS]நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன். [QE][QS2]நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன். [QE]
18. [QS]நான் எனக்குள் “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை [QE][QS2]நான் இழந்து விட்டேன்” என்றேன். [QE]
19. [QS]கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். [QE][QS2]எனக்கு வீடு இல்லை. [QE][QS2]நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும். [QE]
20. [QS]நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். [QE][QS2]நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன். [QE]
21. [QS]ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். [QE][QS2]பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். [QE][QS2]நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்: [QE]
22. [QS]கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. [QE][QS2]கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை. [QE]
23. [QS]ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! [QE][QS2]கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது! [QE]
24. [QS]நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், [QE][QS2]ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன். [QE][PBR]
25. [QS]கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். [QE][QS2]கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். [QE]
26. [QS]ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள [QE][QS2]கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது. [QE]
27. [QS]ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது. [QE][QS2]ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது. [QE]
28. [QS]கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, [QE][QS2]அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான். [QE]
29. [QS]அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும். [QE][QS2]அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம். [QE]
30. [QS]அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும். [QE][QS2]அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும். [QE]
31. [QS]கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை [QE][QS2]அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும். [QE]
32. [QS]கர்த்தர் தண்டிக்கும்போது [QE][QS2]அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார். [QE][QS]அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும் [QE][QS2]அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது. [QE][PBR]
33. [QS]கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை. [QE][QS2]அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை. [QE]
34. [QS]கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை. [QE][QS2]யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை. [QE]
35. [QS]யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. [QE][QS2]ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள். [QE]
36. [QS]கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை. [QE][QS2]கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை. [QE]
37. [QS]ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது, [QE][QS2]நிகழச் செய்யவும் முடியாது. [QE]
38. [QS]உன்னதமான தேவனே [QE][QS2]நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார். [QE]
39. [QS]ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது [QE][QS2]உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது. [QE]
40. [QS]நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம். [QE][QS2]பிறகு கர்த்தரிடம் திரும்புவோம். [QE][PBR]
41. [QS]பரலோகத்தின் தேவனிடம் [QE][QS2]நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம். [QE]
42. [QS]நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். [QE][QS2]இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர். [QE]
43. [QS]நீர் கோபத்தால் மூடப்பட்டு [QE][QS2]எங்களைத் துரத்தினீர். [QE][QS2]நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்! [QE]
44. [QS]ஜெபம் எதுவும் வந்து சேராதபடி [QE][QS2]நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். [QE]
45. [QS]மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும் [QE][QS2]அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர். [QE]
46. [QS]எங்களது பகைவர்கள் எல்லாம் [QE][QS2]எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள். [QE]
47. [QS]நாங்கள் பயந்திருக்கிறோம். [QE][QS2]நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். [QE][QS]நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். [QE][QS2]நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன். [QE]
48. [QS]எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! [QE][QS2]எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன். [QE]
49. [QS]எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! [QE][QS2]நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்! [QE]
50. [QS]கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, [QE][QS2]நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! [QE][QS]நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை [QE][QS2]நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! [QE]
51. [QS]எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது [QE][QS2]என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன. [QE]
52. [QS]அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். [QE][QS2]ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள். [QE]
53. [QS]நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். [QE][QS2]அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள். [QE]
54. [QS]என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. [QE][QS2]“நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன். [QE]
55. [QS]கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். [QE][QS2]நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன். [QE]
56. [QS]நீர் எனது சத்தத்தைக் கேட்டீர். [QE][QS2]நீர் உமது காதுகளை மூடவில்லை. [QE][QS2]நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை. [QE]
57. [QS]நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர். [QE][QS2]“பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர். [QE]
58. [QS]கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். [QE][QS2]நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர். [QE]
59. [QS]கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். [QE][QS2]இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும். [QE]
60. [QS]எனது பகைவர்கள் எவ்வாறு [QE][QS2]என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். [QE][QS]அவர்கள் எனக்கு எதிராகச் செய்த [QE][QS2]அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர். [QE]
61. [QS]கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். [QE][QS2]அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர். [QE]
62. [QS]எல்லா நேரத்திலும் [QE][QS2]எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன. [QE]
[QS2]63. கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், [QE][QS2]என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்! [QE]
64. [QS]கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! [QE][QS2]அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்! [QE]
65. [QS]அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! [QE][QS2]பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்! [QE]
66. [QS]அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! [QE][QS2]கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்! [QE]