1. {#1கர்த்தர் எருசலேமை அழித்தார். } [QS]கர்த்தர் சீயோன் மகளை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார். [QE][QS2]அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார். [QE][QS2]கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை. [QE]
2. [QS]கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார். [QE][QS2]அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார். [QE][QS]அவர் அவரது கோபத்தில் யூதா மகளின்[* யூதா மகள் யூதா கோத்திரம். ] [QE][QS2]கோட்டைகளை அழித்தார். [QE][QS]கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும் [QE][QS2]அதன் அரசர்களையும் தரையில் தூக்கி எறிந்தார். [QE][QS2]அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார். [QE]
3. [QS]கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார். [QE][QS2]அவர் தனது வலது கையை இஸ்ரவேலிலிருந்து எடுத்தார். [QE][QS]பகைவர்கள் வந்தபோது அவர் இதனைச் செய்தார். [QE][QS2]அவர் யாக்கோபில் அக்கினி ஜூவாலைப் போல் எரித்தார். [QE][QS]அவர் சுற்றிலும் உள்ளவற்றை எரிக்கிற [QE][QS2]நெருப்பைப் போன்று இருந்தார். [QE]
4. [QS]கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார். [QE][QS2]அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார். [QE][QS]அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார். [QE][QS2]கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார். [QE][QS]கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார். [QE][QS2]அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார். [QE][PBR]
5. [QS]கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார். [QE][QS2]அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார். [QE][QS]அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார். [QE][QS2]அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார். [QE][QS]அவர் யூதா மகளின் மரித்த ஜனங்களுக்காக [QE][QS2]மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார். [QE][PBR]
6. [QS]கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை [QE][QS2]ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார். [QE][QS]ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக [QE][QS2]இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார். [QE][QS]கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும், [QE][QS2]ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார். [QE][QS]கர்த்தர் அரசன் மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார். [QE][QS2]அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார். [QE]
7. [QS]கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார். [QE][QS2]அவர் எருசலேமின் அரண்மனை சுவர்களை இடித்துப்போடும்படி பகைவர்களை அனுமதித்தார். [QE][QS]பண்டிகை நாளில் ஆரவாரம் செய்வதுபோல் [QE][QS2]கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினர். [QE]
8. [QS]சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார். [QE][QS2]அவர் ஒரு அளவு கோட்டை சுவரில் குறித்து, [QE][QS]அதுவரை இடித்துப் போடவேண்டும் என்று காட்டினார். [QE][QS2]அவர் அழிப்பதிலிருந்து தன்னை நிறுத்தவில்லை. [QE][QS]எனவே, அவர் அனைத்து சுவர்களையும் துக்கத்தில் அழும்படிச் செய்தார். [QE][QS2]அவை எல்லாம் முற்றிலும் ஒன்றுக்கும் உதவாது அழிந்துபோயின. [QE][PBR]
9. [QS]எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன. [QE][QS2]அவர் அதன் தாழ்ப்பாள்களை உடைத்து நொறுக்கிப்போட்டார். [QE][QS]அவரது அரசன் மற்றும் இளவரசர்கள் அயல் நாடுகளில் இருக்கிறார்கள். [QE][QS2]அங்கே அவர்களுக்கு இனி வேறு போதனைகள் எதுவுமில்லை. [QE][QS]எருசலேமின் தீர்க்கதரிசிகளும் கூட [QE][QS2]கர்த்தரிடமிருந்து எந்தவிதமான தரிசனத்தையும் பெறவில்லை. [QE][PBR]
10. [QS]சீயோனின் முதியவர்கள் தரையில் இருக்கின்றனர். [QE][QS2]அவர்கள் தரையில் அமர்ந்து மௌனமாக இருக்கிறார்கள். [QE][QS]தம் தலையில் அவர்கள் தூசியைப் போட்டனர். [QE][QS2]அவர்கள் கோணியைப் போட்டுக்கொள்கிறார்கள். [QE][QS]எருசலேமின் இளம்பெண்கள் துக்கத்தில் [QE][QS2]தலைகளைக் குனிந்து தரையைப் பார்க்கின்றனர். [QE][PBR]
11. [QS]எனது கண்கள் கண்ணீரால் களைத்துப்போயின! [QE][QS2]எனது உள்மனம் கலங்குகிறது! [QE][QS]எனது இதயம் தரையில் ஊற்றப்பட்டதுபோன்று உணர்கின்றது! [QE][QS2]எனது ஜனங்களின் அழிவைக்கண்டு நான் இவ்வாறு உணர்கிறேன். [QE][QS]பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது வீதிகளின் மூலைகளிலும் [QE][QS2]மயக்கமடைந்து கிடக்கின்றனர். [QE]
12. [QS]அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம், [QE][QS2]“அப்பமும் திராட்சைரசமும் எங்கே?” எனக் கேள்வியைக் கேட்ட வண்ணமாகவே அவர்களின் தாயின் மடியிலே மரிக்கின்றனர். [QE]
13. [QS]சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்? [QE][QS2]சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்? [QE][QS]நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்? [QE][QS2]உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது. [QE][QS2]எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. [QE][PBR]
14. [QS]உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள். [QE][QS2]ஆனால் அவர்களது தரிசனங்கள் எல்லாம் பயனற்றவைகளாயின. [QE][QS]அவர்கள் உனது பாவங்களுக்கு எதிராகப் பேசவில்லை. [QE][QS2]அவர்கள் காரியங்களைச் சரிபண்ண முயற்சி செய்யவில்லை. [QE][QS]அவர்கள் உனக்கு செய்திகளைப் பிரசங்கித்தனர். [QE][QS2]ஆனால் அவை உன்னை ஏமாற்றும் செய்திகள். [QE][PBR]
15. [QS]சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள் [QE][QS2]உன்னைப் பார்த்து கைதட்டுகிறார்கள். [QE][QS]அவர்கள் பிரமித்து எருசலேம் மகளைப் பார்த்து [QE][QS2]தலையாட்டுகிறார்கள். [QE][QS]அவர்கள், “இதுதானா, ‘முழுமையான அழகுடைய நகரம்’ [QE][QS2]‘பூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது’ என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?” [QE][QS2]என்று கேட்கிறார்கள். [QE][PBR]
16. [QS]உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள். [QE][QS2]அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள். [QE][QS]அவர்கள், “நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்! [QE][QS2]நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம். [QE][QS2]நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்” என்பார்கள். [QE][PBR]
17. [QS]கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார். [QE][QS2]அவர் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதையே செய்திருக்கிறார். [QE][QS2]நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அவர் எதை கட்டளையிட்டாரோ அதைச் செய்திருக்கிறார். [QE][QS]அவர் அழித்தார், அவரிடம் இரக்கம் இல்லை. [QE][QS2]உனக்கு ஏற்பட்டவற்றுக்காக அவர் உனது பகைவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். [QE][QS2]அவர் உனது பகைவர்களைப் பலப்படுத்தினார். [QE][PBR]
18. [QS]கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு! [QE][QS2]சீயோன் மகளின் சுவரே, ஒரு நதியைப்போன்று கண்ணீர்விடு! [QE][QS2]இரவும் பகலும் உன் கண்ணீரை வடியவிடு! நிறுத்தாதே! [QE][QS]உனது கண்ணின் கறுப்பு விழி [QE][QS2]சும்மா இருக்கும்படிச் செய்யாதே! [QE][PBR]
19. [QS]எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு! [QE][QS2]உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று! [QE][QS2]கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று! [QE][QS]கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு. [QE][QS2]உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள். [QE][QS2]பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள். [QE][QS2]நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள். [QE][PBR]
20. [QS]கர்த்தாவே, என்னைப் பாரும்! [QE][QS2]இந்த வழியில் யாரை நீர் நடத்தியிருக்கிறீர் என்று பாரும்! [QE][QS]என்னை இக்கேள்வியைக் கேட்கவிடும்; பெண்கள் தாம் பெற்ற பிள்ளைகளையே தின்ன வேண்டுமா? [QE][QS2]பெண்கள் தாம் கவனித்துக் கொள்ளவேண்டிய பிள்ளைகளையே தின்னவேண்டுமா? [QE][QS2]கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியரும் தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டுமா? [QE]
21. [QS]நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும் [QE][QS2]முதிய ஆண்களும் விழுந்து கிடக்கின்றனர். [QE][QS]கர்த்தாவே, நீர் அவர்களை உமது கோபத்தின் நாளில் கொன்றீர்! [QE][QS2]அவர்களை இரக்கமில்லாமல் கொன்றீர்! [QE][PBR]
22. [QS]நீர் எல்லா இடங்களிலிருந்தும் [QE][QS2]பயங்கரங்களை என்மேல் வரசெய்தீர். [QE][QS]பண்டிகை நாட்களுக்கு வரவழைப்பதுபோன்று [QE][QS2]நீர் பயங்கரங்களை வரவழைத்தீர். [QE][QS]கர்த்தருடைய கோபநாளில் எவரும் தப்பவில்லை. [QE][QS2]நான் வளர்த்து ஆளாக்கியவர்களை என் பகைவன் கொன்றிருக்கிறான். [QE]