1. {#1எருசலேம் அவளது அழிவிற்காக அழுகிறாள் } [QS]எருசலேம் ஒரு காலத்தில் ஜனங்கள் நிறைந்த நகரமாக இருந்தது. [QE][QS2]ஆனால் இப்போது, இந்த நகரம் வனாந்தரமாயுள்ளது! [QE][QS]எருசலேம் உலகத்தில் பெரிய நகரங்களுள் ஒன்றாயிருந்தது. [QE][QS2]ஆனால் இப்போது, அவள் ஒரு விதவையைப் போன்றிருக்கிறாள். [QE][QS]அவள் ஒரு காலத்தில் நகரங்களில் இளவரசியைப் போன்றிருந்தாள். [QE][QS2]ஆனால் இப்பொழுது அடிமையாக்கப்பட்டிருக்கிறாள். [QE]
2. [QS]அவள் இரவில் பரிதாபமாக அழுகிறாள். [QE][QS2]அவளது கண்ணீர் அவளின் கன்னங்களில் உள்ளது. [QE][QS2]இப்பொழுது யாருமே அவளைத் தேற்றுவாரில்லை. [QE][QS]பல நாடுகள் அவளிடம் நட்புடனிருந்தன. [QE][QS2]இப்பொழுது யாரும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. [QE][QS]அவளது அனைத்து நண்பர்களும் அவளுக்கு முதுகைத் திருப்பிக் கொண்டனர். [QE][QS2]அவளது நண்பர்கள் அவளின் எதிரிகளானார்கள். [QE]
3. [QS]யூதா மிகவும் துன்புற்றது. [QE][QS2]பிறகு, யூதா சிறையெடுக்கப்பட்டது. [QE][QS]யூதா மற்ற நாடுகளுக்கு மத்தியில் வாழ்கிறது. [QE][QS2]ஆனால், அவள் ஓய்வைப் பெற்றிருக்கவில்லை. [QE][QS]ஜனங்கள் அவளைத் துரத்திப் பிடித்தார்கள். [QE][QS2]அவர்கள் அவளைக் குறுகலான பள்ளத்தாக்குகளில் பிடித்தனர். [QE]
4. [QS]சீயோனுக்குப் போகிற சாலைகள் மிகவும் துக்கப்படுகின்றன. [QE][QS2]ஏனென்றால், விடுமுறை நாட்களைக் கழிக்க எவரும் இனிமேல் வருவதில்லை. [QE][QS]சீயோனின் அனைத்து வாசல்களும் அழிக்கப்பட்டன. [QE][QS2]சீயோனின் அனைத்து ஆசாரியர்களும் தவிக்கிறார்கள். [QE][QS]சீயோனின் இளம் பெண்கள் கடத்திக் கொண்டுப்போகப்பட்டனர். [QE][QS2]இவை அனைத்தும் சீயோனுக்கு துக்கத்தை ஏற்படுத்துகிறது. [QE]
5. [QS]எருசலேமின் பகைவர்கள் வெற்றி பெற்றார்கள். [QE][QS2]அவளது பகைவர்கள் வளமடைந்தனர். [QE][QS]இது ஏன் நிகழ்ந்தது என்றால், கர்த்தர் அவளைத் தண்டித்தார். [QE][QS2]அவர் எருசலேமை அவளது பல பாவங்களுக்காகத் தண்டித்தார். [QE][QS]அவளது பிள்ளைகள் வெளியேறிவிட்டனர். [QE][QS2]அவர்களது பகைவர்கள் அவர்களைக் கைப்பற்றி பிடித்துக்கொண்டு போனார்கள். [QE]
6. [QS]சீயோன் மகளது[* சீயோன் மகள் எருசலேமின் மற்றொரு பெயர். ] அழகு போய்விட்டது. [QE][QS2]அவளது இளவரசர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மான்களைப் போலானார்கள். [QE][QS2]அவர்கள் பலமில்லாமல் அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள். [QE]
7. [QS]எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள். [QE][QS]எருசலேம் தான் பாதிக்கப்பட்டு [QE][QS2]தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள். [QE][QS]அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த [QE][QS2]இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள். [QE][QS]அவள் பழைய நாட்களில் பெற்ற [QE][QS2]சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள். [QE][QS]அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை [QE][QS2]எண்ணிப் பார்க்கிறாள். [QE][QS]அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத [QE][QS2]நிலையை எண்ணுகிறாள். [QE][QS]அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள். [QE][QS2]ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள். [QE]
8. [QS]எருசலேம் மிக மோசமான பாவங்களைச் செய்தாள். [QE][QS2]எருசலேம் பாவம் செய்ததால், [QE][QS2]அவள் அழிக்கப்பட்ட நகரமானாள். [QE][QS]ஜனங்கள் அவளது நிலையைக் கண்டு தங்களின் தலைகளை அசைத்து மறுதலிக்கிறார்கள். [QE][QS2]கடந்த காலத்தில் ஜனங்கள் அவளை மதித்தனர். இப்போது ஜனங்கள் அவளை வெறுக்கின்றனர். [QE][QS]ஏனென்றால், அவர்கள் அவளை அவமானப்படுத்தினார்கள். [QE][QS2]எருசலேம் பெருமூச்சுவிட்டு பின்னிட்டுத் திரும்பினாள். [QE]
9. [QS]எருசலேமின் ஆடைகள் அழுக்காயின. [QE][QS2]அவளுக்கு என்ன நிகழப்போகிறது என்பதைப் பற்றி அவள் எண்ணிப் பார்க்கவில்லை. [QE][QS]பார் நான் எப்படி காயப்பட்டேன்! அவளது வீழ்ச்சி அதிசயமானது. [QE][QS2]அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. [QE][QS]“கர்த்தாவே! நான் எவ்வாறு காயப்பட்டேன் என்பதைப் பாரும். [QE][QS2]எனது பகைவன் தன்னை எவ்வளவு பெரியவனாக நினைக்கிறான் என்பதைப் பாரும்!” என்று சொன்னாள். [QE][PBR]
10. [QS]பகைவன் தனது கையை நீட்டினான். [QE][QS2]அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான். [QE][QS]உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள், [QE][QS2]கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்! [QE]
11. [QS]எருசலேமின் அனைத்து ஜனங்களும் தவிக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் உணவுக்காக அலைகிறார்கள். [QE][QS2]அவர்கள் தங்கள் நல்ல பொருட்களை உணவுக்காக மாற்றிக் கொண்டார்கள். [QE][QS2]அவர்கள் உயிர் வாழ்வதற்காக இவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள். [QE][QS]எருசலேம் சொல்கிறது: “கர்த்தாவே என்னைப் பாரும்! [QE][QS2]ஜனங்கள் என்னை எப்படி வெறுக்கிறார்கள் பாரும். [QE]
12. [QS]சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே, [QE][QS2]நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை. [QE][QS]ஆனால் என்னைப் பாருங்கள். [QE][QS2]எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ? [QE][QS2]எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா? [QE][QS]கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ? [QE][QS2]அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார். [QE]
13. [QS]கர்த்தர் மேலிருந்து நெருப்பை அனுப்பினார், [QE][QS2]அந்த நெருப்பு எனது எலும்புகளுக்குள் சென்றது. [QE][QS]அவர் எனது கால்களுக்கு வலையை விரித்தார். [QE][QS2]என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார். [QE][QS]என்னைப் பாழ்நிலமாகப் பண்ணினார். [QE][QS2]நாள் முழுவதும் நான் நோயுற்றிருந்தேன். [QE][PBR]
14. [QS]“எனது பாவங்கள் நுகத்தைப்போன்று கட்டப்பட்டுள்ளது, [QE][QS2]எனது பாவங்கள் கர்த்தருடைய கைகளில் கட்டப்பட்டுள்ளது. [QE][QS]கர்த்தருடைய நுகம் என் கழுத்தில் இருக்கிறது. [QE][QS2]கர்த்தர் என்னை பலவீனமாக்கியுள்ளார். [QE][QS]நான் எதிர்த்து நிற்க முடியாதபடி [QE][QS2]கர்த்தர் என்னை ஒடுக்குகிற ஜனங்களின் கையில் கொடுத்திருக்கிறார். [QE]
15. [QS]கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார். [QE][QS2]அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர். [QE][QS]பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார். [QE][QS2]என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார். [QE][QS]கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல [QE][QS2]யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார். [QE][PBR]
16. [QS]“நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன். [QE][QS2]எனது கண்களில் கண்ணீர் ஓடுகிறது. [QE][QS]எனக்கருகில் ஆறுதல் எதுவுமில்லை. [QE][QS2]என்னைத் தேற்ற எவருமில்லை. [QE][QS]எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர். [QE][QS2]ஏனென்றால் பகைவர்கள் வென்றிருக்கின்றனர்.” [QE][PBR]
17. [QS]சீயோன் தனது கைகளை விரித்தாள். [QE][QS2]அவளுக்கு ஆறுதல் சொல்ல எவருமில்லை. [QE][QS]கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். [QE][QS2]கர்த்தர் யாக்கோபின் பகைவர்களுக்கு நகரத்தைச் சுற்றி வளைக்கும்படி கட்டளையிட்டார். [QE][QS]எருசலேம் அசுத்தமாகியிருக்கிறது. [QE][QS2]அந்தப் பகைவர்களுக்கு மத்தியில் எருசலேம் அசுத்தமாயிற்று. [QE][PBR]
18. [QS]இப்போது எருசலேம் கூறுகிறாள்: “நான் கர்த்தருக்கு செவிகொடுக்க மறுத்தேன். [QE][QS2]எனவே, கர்த்தர் இவற்றையெல்லாம் செய்யும் உரிமையைப் பெற்றார். [QE][QS]எனவே ஜனங்களே, கவனியுங்கள்! எனது வேதனையைப் பாருங்கள்! [QE][QS2]எனது இளம் பெண்களும் ஆண்களும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். [QE]
19. [QS]நான் எனது நேசர்களை கூப்பிட்டேன். [QE][QS2]ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள். [QE][QS]எனது ஆசாரியர்களும், முதியவர்களும் [QE][QS2]இந்நகரத்தில் மரித்திருக்கின்றனர். [QE][QS]அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள். [QE][PBR]
20. [QS]“என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்! [QE][QS2]எனது உள்மனம் கலங்குகிறது! [QE][QS]எனது இதயம் மேலிருந்து கீழ்ப்பக்கம் திரும்பினதுபோல் உள்ளது! [QE][QS2]என்னுடைய கசப்பான அனுபவங்களின் [QE][QS]காரணமாக என் இதயம் இப்படி உணர்கிறது! [QE][QS2]வீதிகளில் வாள் எனது பிள்ளைகளைக் கொன்றது. [QE][QS]வீடுகளுக்குள் மரணம் இருந்தது. [QE][PBR]
21. [QS]“என்னைக் கவனியுங்கள்! ஏனென்றால், நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். [QE][QS2]எனக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை! [QE][QS]எனது பகைவர்கள் எல்லாரும் என் துன்பத்தைக் கேள்விப்பட்டு, [QE][QS2]அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். [QE][QS]நீர் இவற்றை எனக்குச் செய்ததால், [QE][QS2]அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். [QE][QS]தண்டனைக்குரிய காலம் வரும் என்று நீர் சொன்னீர். [QE][QS2]எனது பகைவர்களைத் தண்டிப்பதாகச் சொன்னீர். [QE][QS]நீர் என்ன சொன்னீரோ அதை இப்பொழுது செய்யும். [QE][QS2]நான் இப்பொழுது இருப்பதுபோன்று என் பகைவரும் இருக்கட்டும். [QE][PBR]
22. [QS]“எனது பகைவர்கள் எவ்வளவு கொடியவர்கள் எனப்பாரும். [QE][QS2]எனது பாவங்களுக்கெல்லாம் எனக்கு எவ்வாறு செய்தீரோ அதே வழியில் அவர்களுக்கும் செய்யும். [QE][QS]இதனைச் செய்யும். [QE][QS]ஏனென்றால், நான் மேலும் மேலும் வேதனையடைகிறேன். [QE][QS2]ஏனென்றால், எனது இதயம் நோயுற்றிருக்கிறது.” [QE]