1. {#1தெபோராளின் பாடல் } [PS]சிசெராவை இஸ்ரவேலர் தோற்கடித்த நாளில், தெபோராளும், அபினோகாமின் மகனாகிய பாராக்கும் பாடிய பாடல் இது: [PE][PBR]
2. [QS]“இஸ்ரவேலர் போருக்குத் தயாராயினர். [QE][QS2]அவர்கள் போருக்குச் செல்ல தாமாகவே முன் வந்தனர்! [QE][QS]கர்த்தரை வாழ்த்துங்கள்! [QE][PBR]
3. [QS]“அரசர்களே, கேளுங்கள். [QE][QS2]ஆளுவோரே, கேளுங்கள். நான் பாடுவேன். [QE][QS]நான் கர்த்தருக்குப் பாடுவேன். [QE][QS2]இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பாட்டு இசைப்பேன். [QE][PBR]
4. [QS]“கர்த்தாவே, முன்பு சேயீரிலிருந்து வந்தீர். ஏதோமிலிருந்து அணிவகுத்துச் சென்றீர். [QE][QS2]நீர் அணிவகுத்துச் சென்றபோது, பூமி அதிர்ந்தது. வானம் பொழிந்தது. மேகம் தண்ணீர் தந்தது. [QE]
5. [QS]மலைகள் கர்த்தருக்குமுன் நடுங்கின, [QE][QS2]சீனாய் மலையின், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் முன்னிலலையில் நடுங்கின. [QE][PBR]
6. [QS]“ஆனாத்தின் மகனாகிய சம்காரின் காலத்தில் [QE][QS2]யாகேலின் நாட்களில் பெருஞ்சாலைகள் வெறுமையாய் கிடந்தன. [QE][QS2]வணிகரும் வழி நடப்போரும் பக்கவழியாய்ச் சென்றார்கள். [QE][PBR]
7. [QS]“அங்கு வீரர்கள் இல்லை. [QE][QS2]தெபோராள், நீ வரும்வரைக்கும் அங்கு வீரர்கள் இல்லை. [QE][QS2]இஸ்ரவேலின் தாயாக நீ திகழும்வரைக்கும் இஸ்ரவேலின் வீரர்கள் இருந்ததில்லை. [QE][PBR]
8. [QS]“நகரத்தின் வாசல்களில் போர் புரிவதற்கே [QE][QS2]தேவன் புது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். [QE][QS]இஸ்ரவேலில் 40,000 வீரர்களில் [QE][QS2]ஒருவனிடத்திலும் கேடயத்தையோ, ஈட்டியையோ யாரும் காணவில்லை. [QE][PBR]
9. [QS]“இஸ்ரவேலின் படைத்தலைவர்களை என் நெஞ்சம் நினைக்கிறது. [QE][QS2]அவர்கள் போருக்குத் தாமாகவே முன்வந்தார்கள். [QE][QS]கர்த்தரை வாழ்த்துங்கள்! [QE][PBR]
10. [QS]“வெள்ளைக் கழுதைகளின்மேல் சவாரி செய்வோரும், [QE][QS2]சேண விரிப்பில் அமர்ந்திருப்போரும், பாதை வழியே நடப்போரும் கவனமாய்க் கேளுங்கள்! [QE]
11. [QS]கால்நடைகள் தண்ணீர் பருகும் இடங்களிலே, [QE][QS2]கைத்தாளங்களின் இசையைக் கேட்கிறோம். [QE][QS]கர்த்தரும், அவரது போர் வீரரும் பெற்ற வெற்றிகளை [QE][QS2]ஜனங்கள் பாடுகின்றனர். [QE][QS]நகரவாசல்களினருகே கர்த்தருடைய ஜனங்கள் போரிட்டனர். [QE][QS2]அவர்களே வென்றனர்! [QE][PBR]
12. [QS]“எழுக, எழுக, தெபோராளே! [QE][QS2]எழுக, எழுக, பாடலைப் பாடுக! [QE][QS]எழுந்திரு, பாராக்! [QE][QS2]அபினோகாமின் மகனே, உன் பகைவரை நீ மேற்கொள்! [QE][PBR]
13. [QS]“இப்போதும், மீதியாயிருக்கும் ஜனங்களே, தலைவர்களிடம் செல்லுங்கள். [QE][QS2]கர்த்தருடைய ஜனங்களே! எனக்காக வீரரோடு செல்லுங்கள்! [QE][PBR]
14. [QS]“எப்பிராயீமின் மனிதர்கள் அமலேக்கின் மலை நாட்டினின்று வந்தனர். [QE][QS2]பென்யமீனே, அவர்கள் உன்னையும் உன் ஜனங்களையும் பின்தொடர்ந்தனர். [QE][QS]மாகீரின் குடும்பத்தில் படைத்தலைவர்கள் இருந்தனர். [QE][QS2]வெண்கலக் கைத்தடியேந்திய தலைவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து வந்தனர். [QE]
15. [QS]இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடிருந்தனர். [QE][QS2]இசக்காரின் குடும்பம் பாராக்கிற்கு உண்மையாய் நடந்தது. பள்ளத்தாக்கிற்கு அவர்கள் கால்நடையாய் நடந்தனர். [QE][PBR] [QS]“ரூபனே உனது படைகளின் கூட்டத்தில் துணிவுமிக்க வீரர்கள் பலருண்டு. [QE]
[QS2]16. தொழுவங்களின் சுவரருகே நீ எதற்காக அமர்ந்திருக்கிறாய்? [QE][QS]ரூபனின் துணிவான வீரர்கள் போரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். [QE][QS2]அவர்கள் வீட்டில் அமர்ந்து மந்தைகளுக்காய் இசைத்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். [QE]
17. [QS]யோர்தான் நதியின் மறுகரையில் கீலேயாத்தின் ஜனங்கள் தம் முகாம்களில் தங்கி இருந்தனர். [QE][QS2]தாணின் ஜனங்களே, நீங்கள் கப்பல்களில் தங்கியிருந்ததேன்? [QE][QS]ஆசேர் குடும்பம் கடற்கரையில் [QE][QS2]பாதுகாப்பான துறைமுகத்தில் முகாமிட்டு தங்கினர். [QE][PBR]
18. [QS]“ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து [QE][QS2]மலைகளின் மேல் போரிட்டனர். [QE]
19. [QS]கானானின் அரசர்கள் போரிட வந்தனர். [QE][QS2]ஆனால் பொக்கிஷத்தைத் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை! [QE][QS]தானாக் நகரத்தில் [QE][QS2]மெகிதோவின் கரையில் போரிட்டனர். [QE]
20. [QS]வானிலிருந்து நட்சத்திரங்கள் போரிட்டன. [QE][QS2]அவைகள் வான வீதியிலிருந்து சிசெராவோடு போர் செய்தன. [QE]
21. [QS]பழைய நதியாகிய கீசோன், [QE][QS2]சிசெராவின் ஆட்களை அடித்துச் சென்றது. [QE][QS]எனது ஆத்துமாவே, ஆற்றலோடு புறப்படு! [QE]
22. [QS]குதிரையின் குளம்புகள் பூமியில் மோதின. [QE][QS2]சிசெராவின் பலமான குதிரைகள் ஓடின, மேலும் ஓடின. [QE][PBR]
23. [QS]“கர்த்தருடைய தூதன், ‘மேரோஸ் நகரை சபியுங்கள். [QE][QS2]அதன் குடிகளை சபியுங்கள்! [QE][QS]கர்த்தருக்கு உதவுவதற்காக அவர்கள் வீரரோடு சேரவில்லை’ என்றான். [QE]
24. [QS]கேனியனாகிய ஏபேரின் மனைவி யாகேல். [QE][QS2]அவள் பெண்களெல்லாரிலும் ஆசீர்வதிக்கப்பட்டவள். [QE]
25. [QS]சிசெரா தண்ணீரைக் கேட்டான். [QE][QS2]யாகேல் பாலைக் கொடுத்தாள். [QE][QS]அரசனுக்கான கிண்ணத்தில் [QE][QS2]அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள். [QE]
26. [QS]யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள். [QE][QS2]வேலையாள் பயன்படுத்தும் சுத்தியை அவள் வலதுகையில் பிடித்தாள். [QE][QS]பின் சிசெராவின் தலைமீது சுத்தியால் அடித்தாள்! [QE][QS2]அவன் நெற்றிப் பொட்டின் உள்ளே துளையிட்டாள்! [QE]
27. [QS]அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான். [QE][QS2]அவன் மடிந்தான். [QE][QS2]அங்கு கிடந்தான். [QE][QS]அவன் அவள் பாதங்களினிடையே வீழ்ந்தான். [QE][QS2]அவன் மடிந்தான். [QE][QS]சிசெரா வீழ்ந்த இடத்திலேயே மடிந்தான். [QE][QS2]அங்கு மரித்து கிடந்தான்! [QE][PBR]
28. [QS]“சிசெராவின் தாய் ஜன்னலினூடே பார்த்து அழுதாள். [QE][QS2]சிசெராவின் தாய் திரைச் சீலைகளினூடே பார்த்தாள். [QE][QS]‘ஏன் சிசெராவின் இரதம் தாமதிக்கிறது? [QE][QS2]அவன் இரத ஒலியை நான் கேளாதது ஏன்?’ என்று புலம்பினாள். [QE][PBR]
29. [QS]“அவளின் புத்திசாலியான வேலைக்காரப் பெண் அவளுக்கு பதில் அளித்தாள். [QE][QS2]ஆம், பணிப்பெண் அவளுக்குப் பதில் சொன்னாள். [QE]
30. [QS]‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள். [QE][QS2]தோற்கடித்த ஜனங்களிடமிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். [QE][QS]அவற்றைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! [QE][QS2]ஒவ்வொரு வீரனும் ஓரிரு பெண்களை எடுத்துக்கொள்கிறான். [QE][QS]சிசெரா சாயம் தீர்த்த ஆடையைக் கண்டெடுத்தான். [QE][QS2]அதுவே அவன் முடிவாயிற்று! [QE][QS]சிசெரா அழகான ஆடை ஒன்றைக் கண்டெடுத்தான். [QE][QS2]வெற்றி வேந்தன் சிசெரா தான் அணிவதற்காக இரண்டு ஆடைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.’ [QE][PBR]
31. [QS]“கர்த்தாவே, உமது பகைவர்கள் அனைவரும் இவ்வாறு மடியட்டும். [QE][QS2]உமது அன்பான ஜனங்கள் உதய சூரியனைப்போல வலிமை பெறட்டும்!” [QE][PBR] [PS]இதன் பின்பு 40 ஆண்டுக் காலத்திற்கு தேசத்தில் அமைதி நிலவியது. [PE]