1. [PS]யோனா மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவன் தனது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்தான். யோனா, [PE][PBR]
2. [QS]“நான் மிக மோசமான துன்பத்தில் இருந்தேன். [QE][QS2]நான் உதவிக்காகக் கர்த்தரை வேண்டினேன். [QE][QS2]அவர் எனக்குப் பதில் கொடுத்தார். [QE][QS]நான் பாதாளத்தின் ஆழத்தில் இருந்தேன். [QE][QS2]கர்த்தாவே, நான் உம்மிடம் கதறினேன். [QE][QS2]நீர் எனது குரலைக் கேட்டீர். [QE][PBR]
3. [QS]“நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர். [QE][QS2]உமது வல்லமையுடைய அலைகள் என்மேல் வீசின. [QE][QS]நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றேன். [QE][QS2]என்னைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது, [QE]
4. [QS]பிறகு நான் நினைத்தேன், ‘இப்போது நான் உம் பார்வையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளேன்.’ [QE][QS2]ஆனால், நான் தொடர்ந்து உதவிக்காக உமது பரிசுத்த ஆலயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். [QE][PBR]
5. [QS]“கடல் தண்ணீர் என்னை மூடியது. [QE][QS2]தண்ணீரானது எனது வாயை நிறைத்தது. [QE][QS2]என்னால் சுவாசிக்க முடியவில்லை. [QE][QS]நான் கடலுக்குள் மேலும் மேலும் ஆழமாகச் சென்றேன். [QE][QS2]கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. [QE]
6. [QS]நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன். [QE][QS2]நான் இந்தச் சிறைக்குள் என்றென்றும் இருப்பேனோ என்று நினைத்தேன். [QE][QS]ஆனால் எனது கல்லறையிலிருந்து என்னை என் தேவனாகிய கர்த்தர் மீட்டார். [QE][QS2]தேவனே, நீர் எனக்கு மீண்டும் உயிர்கொடுத்தீர். [QE][PBR]
7. [QS]“எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது. [QE][QS2]ஆனால், பிறகு நான் கர்த்தரை நினைத்தேன். [QE][QS]கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபம் செய்தேன், [QE][QS2]நீர் உமது பரிசுத்தமான ஆலயத்திலிருந்து எனது ஜெபத்தைக் கேட்டீர். [QE][PBR]
8. [QS]“சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள். [QE][QS2]ஆனால், அந்தச் சிலைகள் அவர்களுக்கு உதவுவதில்லை. [QE]
9. [QS]கர்த்தர் ஒருவரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது. [QE][QS2]கர்த்தாவே, நான் உமக்குப் பலிகளை கொடுப்பேன். [QE][QS]நான் உம்மைத் துதித்து, உமக்கு நன்றி சொல்வேன். நான் உம்மிடம் சிறப்பு வாக்குறுதிகளைச் செய்வேன், [QE][QS2]நான் வாக்குறுதிப்படி செய்வேன்” என்றான். [QE][PBR]
10. [PS]பிறகு கர்த்தர் மீனோடு பேசினார். மீன் யோனாவை தன் வயிற்றிலிருந்து உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது. [PE]