1. {#1வந்துகொண்டிருக்கும் கர்த்தருடைய நாள் } [QS]சீயோனில் எக்காளம் ஊதுங்கள். [QE][QS2]என் பரிசுத்தமான மலையின் மேல் எச்சரிக்கை சத்தமிடுங்கள். [QE][QS]இந்நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களும் பயத்தால் நடுங்கட்டும். [QE][QS2]கர்த்தருடைய சிறப்பான நாள் வந்துகொண்டிருக்கிறது. [QE][QS]கர்த்தருடைய சிறப்பு நாள் [QE][QS2]அருகில் உள்ளது. [QE]
2. [QS]அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும். [QE][QS2]அது இருளும் மந்தாரமுமான நாளாக இருக்கும். [QE][QS]சூரிய உதயத்தின்போது நீங்கள் மலை முழுவதும் படை பரவியிருப்பதைப் பார்ப்பீர்கள். [QE][QS2]அப்படை சிறந்ததாகவும் வல்லமையுடையதாகவும் இருக்கும். [QE][QS]இதற்கு முன்னால் எதுவும் இதுபோல் இருந்ததில்லை. [QE][QS2]இதற்கு பிறகு எதுவும் இதுபோல் இருப்பதில்லை. [QE]
3. [QS]படையானது எரியும் நெருப்பைப் போன்று [QE][QS2]நாட்டை அழிக்கும். [QE][QS]அவைகளின் முன்னால் அந்நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும். [QE][QS]அதற்குப் பிறகு நாடானது [QE][QS2]வெற்று வனாந்தரம் போன்றிருக்கும். [QE][QS]அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது. [QE]
4. [QS]வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும். [QE][QS2]அவை போர்க் குதிரைகளைப்போன்று ஓடும். [QE]
5. [QS]அவைகளுக்குச் செவிகொடுங்கள். [QE][QS]இது மலைகளின் மேல்வரும் இரதங்களின் ஒலி போல் உள்ளது. [QE][QS2]இது பதரை எரிக்கும் நெருப்பின் ஒலிபோல் உள்ளது. [QE][QS]அவர்கள் வல்லமை வாய்ந்த ஜனங்கள். [QE][QS2]அவர்கள் போருக்குத் தயாராக இருக்கிறார்கள். [QE]
6. [QS]இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள். [QE][QS2]அவர்களின் முகங்கள் அச்சத்தால் வெளுத்தன. [QE][PBR]
7. [QS]வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள். [QE][QS2]வீரர்கள் சுவர்களின் ஏறுகிறார்கள். [QE][QS]ஒவ்வொரு வீரனும் நேராகக் செல்கிறான். [QE][QS2]அவர்கள் தம் பாதையில் இருந்து விலகமாட்டார்கள். [QE]
8. [QS]அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள். [QE][QS2]ஒவ்வொரு வீரனும் தன் சொந்தப் பாதையில் நடக்கிறான். [QE][QS]வீரர்களில் ஒருவன் மோதிக் கீழே விழுந்தாலும் [QE][QS2]மற்றவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பார்கள். [QE]
9. [QS]அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள். [QE][QS2]அவர்கள் விரைவாகச் சுவர்மேல் ஏறுகிறார்கள். [QE][QS]அவர்கள் வீடுகளுக்குள் ஏறுகிறார்கள். [QE][QS2]அவர்கள் ஜன்னல் வழியாகத் திருடர்களைப்போல் ஏறுகின்றனர். [QE]
10. [QS]அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது. [QE][QS2]சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன. [QE]
11. [QS]கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார். [QE][QS2]அவரது பாளையம் மிகப்பெரியது. [QE][QS]அப்படை அவரது கட்டளைக்கு அடிபணிகிறது. [QE][QS2]அப்படை மிகவும் வல்லமையுடையது. [QE][QS]கர்த்தருடைய சிறப்பு நாள் உயர்வானதாகவும் பயங்கரமானதாகவும் உள்ளது. [QE][QS2]ஒருவரும் இதை நிறுத்த முடியாது. [QE]
12. {#1கர்த்தர் ஜனங்களிடம் மாறும்படிக் கூறுகிறார் } [QS]இது கர்த்தருடைய செய்தி. [QE][QS2]“உங்கள் முழுமனதோடு இப்பொழுது என்னிடம் திரும்பி வாருங்கள். [QE][QS]நீங்கள் தீமை செய்தீர்கள். [QE][QS2]அழுங்கள், உணவு உண்ணவேண்டாம். [QE]
13. [QS]உங்கள் ஆடைகளையல்ல, [QE][QS]இதயத்தைக் கிழியுங்கள்.” [QE][QS]உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பி வாருங்கள். [QE][QS2]அவர் இரக்கமும் கருணையும் உள்ளவர். [QE][QS2]அவர் விரைவாகக் கோபப்படமாட்டார். [QE][QS2]அவரிடம் மிகுந்த அன்பு உண்டு. [QE][QS]ஒருவேளை அவர் தனது மனதை, [QE][QS2]திட்டமிட்டிருந்த பயங்கரமான தண்டனையிலிருந்து மாற்றிக்கொள்ளலாம். [QE]
14. [QS]யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். [QE][QS2]ஒருவேளை அவர் உங்களுக்காக ஆசீர்வாதத்தை விட்டு வைத்திருக்கலாம். [QE][QS]பிறகு நீங்கள் உங்கள் தேவானாகிய கர்த்தருக்கு தானியக் காணிக்கைகளும் [QE][QS2]பானங்களின் காணிக்கைகளும் தரலாம். [QE]
15. {#1கர்த்தரிடம் ஜெபியுங்கள் } [QS]சீயோனில் எக்காளம் ஊதுங்கள். [QE][QS2]சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். [QE][QS2]ஒரு உபவாச காலத்துக்காகக் கூப்பிடுங்கள். [QE]
16. [QS]ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள். [QE][QS2]சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். [QE][QS]வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள். [QE][QS2]குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள். [QE][QS]தங்களது படுக்கை அறையிலிருந்து [QE][QS2]புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும். [QE]
17. [QS]மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும், [QE][QS2]கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும். [QE][QS]அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும். [QE][QS]“கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும். [QE][QS2]உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும். [QE][QS2]மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும். [QE][QS]மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’ [QE][QS2]என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.” [QE]
18. {#1கர்த்தர் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வருவார் } [QS]பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார். [QE][QS2]அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார். [QE]
19. [QS]கர்த்தர் தமது ஜனங்களிடம், [QE][QS]“நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன். [QE][QS2]உங்களுக்கு ஏராளமாக இருக்கும். [QE][QS2]நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன். [QE]
20. [QS]இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன். [QE][QS2]நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன். [QE][QS]அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள். [QE][QS2]அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள். [QE][QS]ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள். [QE][QS2]அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!” [QE][QS]என்று சொன்னார். [QE]
21. {#1இந்த நாடு மீண்டும் புதிதாக்கப்படும் } [QS]தேசமே, பயப்படாதே. [QE][QS]சந்தோஷமாக இரு. [QE][QS2]முழுமையாகக் களிகூரு. [QE][QS2]கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். [QE]
22. [QS]வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம். [QE][QS2]வனாந்திரத்தில் மேய்ச்சல்கள் உண்டாகும். [QE][QS]மரங்கள் கனிகளைத் தரும், [QE][QS2]அத்தி மரங்களும் திராட்சைக் கொடிகளும் மிகுதியான பழங்களைத் தரும். [QE]
23. [QS]எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். [QE][QS2]சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள், [QE][QS]அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார். [QE][QS2]அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார். [QE]
24. [QS]களங்கள் தானியத்தால் நிரம்பும். [QE][QS2]குடங்கள் திராட்சைரசத்தாலும், என்ணெயாலும் நிரம்பி வழியும். [QE]
25. [QS]“கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன். [QE][QS2]உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும், [QE][QS2]பச்சைக்கிளிகளும் [QE][QS2]முசுக்கட்டைப் பூச்சிகளும், [QE][QS2]பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன. [QE][QS]ஆனால் கர்த்தராகிய நான், [QE][QS2]அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன். [QE]
26. [QS]பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும். [QE][QS2]நீங்கள் நிறைவு அடைவீர்கள். [QE][QS]நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் போற்றுவீர்கள். [QE][QS2]அவர் உங்களுக்காக அற்புதமானவற்றைச் செய்திருக்கிறார். [QE][QS]எனது ஜனங்கள் இனி ஒருபோதும் வெட்டகப்பட்டுப்போவதில்லை. [QE]
27. [QS]நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். [QE][QS2]நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். [QE][QS2]வேறு தேவன் இல்லை. [QE][QS]எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்.” [QE]
28. {#1அனைத்து ஜனங்களுக்கும் தேவன் தனது ஆவியை கொடுப்பார் } [QS]“இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன். [QE][QS]உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். [QE][QS2]உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். [QE][QS2]உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். [QE]
29. [QS]அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும் [QE][QS2]என் ஆவியை ஊற்றுவேன். [QE]
30. [QS]நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு, [QE][QS2]அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். [QE]
31. [QS]சூரியன் இருட்டாக மாற்றப்படும். [QE][QS2]சந்திரன் இரத்தமாக மாற்றப்படும். [QE][QS2]பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். [QE]
32. [QS]பிறகு, கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” [QE][QS2]சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள். [QE][QS2]இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். [QE][QS2]ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள். [QE]