1. அப்போது யோபு,
2. “ஆம் நீர் கூறுவது உண்மையென அறிவேன். [QBR2] ஆனால் ஒரு மனிதன் எப்படி தேவனுக்கு முன் நீதிமானாயிருக்க முடியும்? [QBR]
3. ஒருவன் தேவனிடம் வாதாட முடியாது! [QBR2] தேவன் 1,000 கேள்விகளைக் கேட்கமுடியும், ஒருவனும் ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது! [QBR]
4. தேவன் மிகுந்த ஞானமுள்ளவர், அவரது வல்லமை மிகப்பெரியது! [QBR2] ஒருவனும் தேவனோடு போராடி, காயமுறாமலிருக்க முடியாது. [QBR]
5. தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார், [QBR2] அவை அதனை அறியாது. [QBR]
6. பூமியை அசைக்கும்படி தேவன் பூமியதிர்ச்சியை அனுப்புகிறார். [QBR2] தேவன் பூமியின் அஸ்திபாரங்களை அசைக்கிறார். [QBR]
7. தேவன் சூரியனிடம் பேசமுடியும், அதை உதயமாகாமல் செய்யமுடியும். [QBR2] அவர் விண்மீன்களை ஒளிவிடாதபடி பூட்டமுடியும். [QBR]
8. தேவன் மட்டுமே வானங்களை உண்டாக்கினார், [QBR2] அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார்.
9. “அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருக சீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினார். [QBR]
10. மனிதர் புரிந்துகொள்ள முடியாத அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார். [QBR2] தேவனுடைய எண்ணிமுடியாத அதிசங்களுக்கு முடிவேயில்லை! [QBR]
11. தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைப் பார்க்க முடியாது. [QBR2] தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைக் கவனிப்பதில்லை. [QBR]
12. தேவன் எதையாவது எடுத்துக்கொண்டால் அவரை யாரும் தடுக்க முடியாது. [QBR2] ‘நீர் என்ன செய்கிறீர்?’ [QBR2] என்று யாரும் அவரைக் கேட்கமுடியாது. [QBR]
13. தேவன் தமது கோபத்தை அடக்கிக்கொள்ளமாட்டார். [QBR2] ராகாபின் [*ராகாப் ஒரு ராட்சசன் அல்லது கடல்மிருகம். ராகாப் கடலைக் கட்டுப்படுத்துவதாக ஜனங்கள் நினைத்தனர். ராகாப் தேவனின் பகைவரது அடையாளம் அல்லது தீமைக்குரிய ஏதோ ஒன்று.] உதவியாளருங்கூட தேவனுக்குப் பயந்திருக்கிறார்கள். [QBR]
14. எனவே நான் தேவனுக்கு பதில் கொடுக்க முடியாது. [QBR2] அவரிடம் என்ன சொல்வேனென்பதை நான் அறியேன். [QBR]
15. நான் களங்கமற்றவன், ஆனால் என்னால் அவருக்குப் பதில் கூறமுடியாது. [QBR2] என் நீதிபதியிடம் (தேவனிடம்) இரக்கத்திற்காக மன்றாடமட்டுமே என்னாலாகும். [QBR]
16. நான் கூப்பிட்டு அவர் பதில் தந்தாலும், [QBR2] அவர் உண்மையாகவே எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நான் நம்ப முடியாது. [QBR]
17. தேவன் என்னை நசுக்குவதற்குப் புயல்களை அனுப்புகிறார். [QBR2] எக்காரணமுமின்றி எனக்கு இன்னுமதிகமான காயங்களைத் தருகிறார். [QBR]
18. மீண்டும் இன்னொரு முறை சுவாசிக்க தேவன் என்னை அனுமதிக்கமாட்டார். [QBR2] அவர் எனக்கு இன்னும் தெல்லைகளைத் தருகிறார். [QBR]
19. தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர்! [QBR2] யார் தேவனை நியாயசபைக்கு அழைத்து வந்து, நியாயம் வழங்கும்படி சொல்ல முடியும்? [QBR]
20. நான் களங்கமற்றவன், ஆனால் நான் கூறுபவை என்னைக் குற்றவாளியாகக் காட்டக்கூடும். [QBR2] நான் உத்தமன், ஆனால் நான் பேசினால் என் வாய் என்னைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது. [QBR]
21. நான் களங்க மற்றவன், நான் எதைச் சிந்திப்பதென அறியேன். [QBR2] நான் என் சொந்த வாழ்க்கையையே வெறுக்கிறேன். [QBR]
22. நான் எனக்குள்ளே, ‘இதே மாதிரி எல்லோருக்கும் நிகழ்கிறது’ [QBR2] களங்கமற்றவர்களும் குற்றவாளிகளும் முடிவை காண்பார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். [QBR]
23. கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால் [QBR2] தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா? [QBR]
24. தீயவன் ஒருவன் ஒரு நிலத்தைத் தன தாக்கிக்கொள்ளும்போது, [QBR2] நிகழ்வனவற்றைத் தலைவர்கள் காணாதபடி தேவன் செய்கிறாரா?அது உண்மையானால் தேவன் யார்?
25. “ஓர் ஓட்டக்காரனைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன. [QBR2] என் நாட்கள் பறக்கின்றன, அவற்றில் சந்தோஷமில்லை. [QBR]
26. வேகமாய் ஓடுகின்ற கப்பல்களைப் போலவும் [QBR2] இரையைப் பிடிக்க பாய்கின்ற கழுகுகளைப் போலவும் என் நாட்கள் கடந்துச்செல்கின்றன.
27. “நான் முறையிடுவதில்லை, ‘என் வேதனையை மறப்பேன், [QBR2] என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’ [QBR2] என்று நான் கூறினால், [QBR]
28. அது எந்த மாற்றத்தையும் உண்மையாக ஏற்படுத்துவதில்லை! [QBR2] துன்பங்கள் என்னை அச்சுறுத்துகின்றன. [QBR]
29. நான் ஏற்கெனவே குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டேன். [QBR2] எனவே, நான் ஏன் முயன்றுகொண்டிருக்க வேண்டும்? [QBR] ‘அதை மறந்துவிடு!’ [QBR2] என நான் சொல்கிறேன். [QBR]
30. பனியால் என்னைக் கழுவினாலும், [QBR2] சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும், [QBR]
31. தேவன் என்னைச் சேற்றுக் குழியில் தள்ளுவார். [QBR2] அப்போது என் உடைகளும் என்னை வெறுக்கும். [QBR]
32. தேவன் கூறும் குற்றங்களுக்கு பதில் கூற என்னைப் போன்று மனிதன் அல்ல, [QBR2] நியாய சபையில் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது. [QBR]
33. இரு பக்கங்களிலும் நியாயம் கேட்க ஒருவர் இருந்தால், நல்லதென நான் விரும்புகிறேன். [QBR2] எங்களை நியாயமாக (தக்க முறையில்) நியாயந்தீர்க்க வல்லவர் ஒருவர் இருக்கமாட்டாரா என நான் விரும்புகிறேன். [QBR]
34. தேவனுடைய தண்டிக்கும் கோலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுபவர் ஒருவர் இருக்கமாட்டாரா என விரும்புகிறேன். [QBR2] அப்போது அவருடைய பயமுறுத்துதல்கள் என்னை அச்சுறுத்தாது. [QBR]
35. அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும். [QBR2] ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றான். [PE]