1. {#1பில்தாத் யோபுவிடம் பேசுகிறான் } [PS]அப்போது சூகியனான பில்தாத் பதிலாக, [PE][PBR]
2. [QS]“எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்? [QE][QS2]பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன. [QE]
3. [QS]தேவன் நியாயத்தை மாற்றுவாரோ? [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ? [QE]
4. [QS]உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார். [QE][QS2]அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள். [QE]
5. [QS]ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து [QE][QS2]சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும். [QE]
6. [QS]நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால், [QE][QS2]அவர் விரைந்து உமக்கு உதவ வருவார். [QE][QS2]உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார். [QE]
7. [QS]தொடக்கம் அற்பமாக இருந்தாலும் [QE][QS2]உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும். [QE][PBR]
8. [QS]“வயது முதிர்ந்தோரைக் கேளும், [QE][QS2]அவர்கள் முற்பிதாக்கள் அறிந்துகொண்டதைத் தெரிந்துகொள்ளும். [QE]
9. [QS]ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம். [QE][QS2]ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை. [QE]
10. [QS]முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும். [QE][QS2]அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்” என்று கூறினான். [QE][PBR]
11. [QS]பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ? [QE][QS2]தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ? [QE]
12. [QS]இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும். [QE][QS2]அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும். [QE]
13. [QS]தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள். [QE][QS2]தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும். [QE]
14. [QS]அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை. [QE][QS2]அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது. [QE]
15. [QS]சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும். [QE][QS2]அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது. [QE]
16. [QS]அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான். [QE][QS2]தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும். [QE]
17. [QS]பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும். [QE][QS2]பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும். [QE]
18. [QS]ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும், [QE][QS2]அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள். [QE]
19. [QS]ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது. [QE][QS2]அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது. [QE]
20. [QS]தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார். [QE][QS2]அவர் கொடியோருக்கு உதவமாட்டார். [QE]
21. [QS]தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும் [QE][QS2]உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார். [QE]
22. [QS]ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள். [QE][QS2]தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்” என்றான். [QE]