1. [QS]யோபு மீண்டும், “பூமியில் மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களுண்டு [QE][QS2]வேலைக்கென வாங்கப்பட்ட பணியாளின் நாட்களைப் போன்றது அவன் நாட்கள். [QE]
2. [QS]வெப்ப நாளில் மிகுந்த உழைப்பிற்குப்பின் குளிர்ந்த நிழலை நாடும் அடிமையைப் போன்றவன் மனிதன். [QE][QS2]சம்பள நாளுக்காகக் காத்திருக்கும் அப்பணியாளைப் போன்றிருக்கிறான். [QE]
3. [QS]ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன. [QE][QS2]துன்பந்தரும் இரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்தேன். [QE]
4. [QS]நான் படுக்கும்போது, ‘எழுவதற்கு எத்தனை சமயம் இருக்கிறது?’ என்று எண்ணுகிறேன். [QE][QS2]ஆனால் இரவு நீண்டுக் கொண்டேபோகிறது. [QE][QS2]நான் திரும்பியும் புரண்டும் சூரியன் உதிக்கும்வரை படுத்திருக்கிறேன். [QE]
5. [QS]என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன. [QE][QS2]என் தோல் உரிந்து புண்களால் நிரம்பியிருக்கின்றன. [QE][PBR]
6. [QS]“நெய்பவனின் நாடாவைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன. [QE][QS2]என் வாழ்க்கை நம்பிக்கையின்றி முடிவடைகிறது. [QE]
7. [QS]தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும். [QE][QS2]நான் இனிமேல் (மீண்டும்) நன்மையைப் பார்க்கப்போவதில்லை. [QE]
8. [QS]நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை. [QE][QS2]என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன். [QE]
9. [QS]மேகம் மறைந்து காணாமற்போகிறது. [QE][QS2]அதைப் போன்று, ஒருவன் மரித்துக் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுகிறான், அவன் மீண்டும் வருவதில்லை. [QE]
10. [QS]அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை. [QE][QS2]அவன் வீடு அவனை இனி ஒருபோதும் அறியாது. [QE][PBR]
11. [QS]“எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்! [QE][QS2]என் ஆவி துன்புறுகிறது! [QE][QS2]என் ஆத்துமா கசந்து போயிருப்பதால் நான் முறையிடுவேன். [QE]
12. [QS]தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்? [QE][QS2]நான் கடலா, கடல் அரக்கனா? [QE]
13. [QS]என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பிக்கொண்டிருந்தேன். [QE][QS2]என் கட்டில் எனக்கு ஓய்வையும் நிம்மதியையும் தருமென்று எதிர்ப்பார்த்தேன். [QE]
14. [QS]ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர், [QE][QS2]என்னைத் தரிசனங்களால் அச்சுறுத்துகிறீர். [QE]
15. [QS]எனவே நான் வாழ்வதைக் காட்டிலும் [QE][QS2]மூச்சடைத்து மரிப்பதை விரும்புகிறேன். [QE]
16. [QS]நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன். [QE][QS2]நான் என்றென்றும் வாழ விரும்பமாட்டேன். [QE][QS]என்னைத் தனிமையாக விட்டுவிடுங்கள்! [QE][QS2]ஏனெனில் என் வாழ்க்கை பொருளற்றது. (அர்த்தமற்றது) [QE]
17. [QS]தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்? [QE][QS2]ஏன் அவனைப் பெருமைப்படுத்துகிறீர்? [QE][QS2]ஏன் அவனைக் கண்டுக்கொள்கிறீர்? [QE]
18. [QS]ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து, [QE][QS2]ஒவ்வொரு விநாடியும் சோதிக்கிறீர்? [QE]
19. [QS]தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை. [QE][QS2]என்னைவிட்டு ஒருகணமும் நீர் விலகுவதில்லை. [QE]
20. [QS]தேவனே, நீர் ஜனங்களை கவனித்து காப்பாற்றுகிறீர். [QE][QS2]நான் பாவம் செய்திருந்தால், நான் என்ன செய்ய முடியும். [QE][QS]நீர் என்னை உமது இலக்காக ஏன் பயன்படுத்துகிறீர்? [QE][QS2]நான் உமக்குத் தொல்லையாகி போனேனா? [QE]
21. [QS]ஏன் நீர் என் தவறை மன்னிக்கக் கூடாது? [QE][QS2]என் பாவங்களை நீர் ஏன் மன்னிக்கக்கூடாது? [QE][QS]நான் விரைவில் மடிந்து கல்லறைக்குள் வைக்கப்படுவேன். [QE][QS2]அப்போது என்னைத் தேடுவீர்கள், நான் அழிந்துப்போயிருப்பேன்” என்றான். [QE]