1. {யோபு எலிப்பாசுக்குப் பதில் கூறுகிறான்} [PS] அப்போது யோபு,
2. “என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால், [QBR2] நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய். [QBR]
3. கடற்கரை மணலைக் காட்டிலும் என் துயர் பாரமானது. [QBR2] அதனால்தான் என் வார்த்தைகள் மூடத்தனமானவையாகத் தோன்றுகின்றன. [QBR]
4. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அம்புகள் என்னுள்ளே இருக்கின்றன. [QBR2] அந்த அம்புகளின் விஷத்தை என் ஆவி பருகுகின்றது! [QBR2] தேவனுடைய கொடிய ஆயுதங்கள் எனக்கெதிராக அணிவகுத்து நிற்கின்றன. [QBR]
5. எந்தத் தீமையும் நிகழாதபோது நீ கூறியவற்றைச் சொல்வது சுலபம் (எளிது). [QBR2] காட்டுக் கழுதையும் தின்பதற்குப் புல் அகப்படும்போது முறையிடாது. [QBR2] பசுவும் தன் உணவு கிடைக்கும்போது முறையிடாது. [QBR]
6. உப்பற்ற உணவு சுவைக்காது. [QBR2] முட்டையின் வெண்பகுதிக்குச் சுவையில்லை. [QBR]
7. நான் அதைத் தொட மறுக்கிறேன்; [QBR2] அத்தகைய உணவு எனக்குச் சலிப்பைத் தருகிறது! [QBR2] உனது வார்த்தைகளும் இப்போது எனக்கு அவ்வாறே உள்ளன.
8. “நான் கேட்பவை எனக்குக் கிடைக்கவேண்டுமென விரும்புகிறேன். [QBR2] நான் விரும்பியவற்றைத் தேவன் எனக்குத் தருவார் என விரும்புகிறேன். [QBR]
9. தேவன் என்னை நசுக்கிப் போடவேண்டும் என விரும்புகிறேன். [QBR2] அவருடைய கரத்தின் மூலமாக என்னை அழித்திடலாம். [QBR]
10. அவர் என்னைக் கொன்றுவிட்டால் நான் ஒரு காரியத்தைக் குறித்து ஆறுதலடைவேன். [QBR2] நான் ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியடைவேன். [QBR2] இத்தனை வேதனைகளை அனுபவித்துங்கூட பரிசுத்தமானவரின் வார்த்தைகளை கீழ்ப்படிய நான் மறுக்கவில்லை.
11. “என் வலிமை குறைந்துப்போயிற்று, எனவே தொடர்ந்து வாழ்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. [QBR2] எனக்கு என்ன நேருமென அறியேன். [QBR2] எனவே, நான் பொறுமையுடன் இருப்பதற்கு காரணமில்லை. [QBR]
12. நான் பாறையைப்போன்று பலம் பொருந்தியவனா? [QBR2] என் உடம்பு வெண்கலத்தால் ஆனதா? [QBR]
13. எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை. [QBR2] ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
14. “ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும். [QBR2] ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும். [QBR]
15. ஆனால் என் சகோதரராகிய நீங்களோ நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. [QBR2] நான் உங்களைச் சார்ந்திருக்க முடியாது. [QBR2] சிலகாலம் பாய்ந்தும், மற்ற சிலகாலம் பாயாமலும் இருக்கின்ற நீரோடைகளைப்போல நீங்கள் காணப்படுகிறீர்கள். [QBR]
16. பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள். [QBR]
17. உலர்ந்த வெப்பக்காலத்தில் தண்ணீர் பாய்வது நின்றுவிடுகிறது, [QBR2] நீரூற்றும் மறைந்துவிடுகிறது. [QBR]
18. வியாபாரிகள் பாலைவனத்தின் வளைவுகளையும் நெளிவுகளையும் பின்தொடர்ந்து, [QBR2] காணாமல்போய்விடுகிறார்கள். [QBR]
19. தேமாவின் வியாபாரிகள் தண்ணீரைத் தேடுகிறார்கள். [QBR2] சேபாவின் பிரயாணிகள் (பயணிகள்) நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். [QBR]
20. அவர்கள் தண்ணீரைக் கண்டடைவதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள், [QBR2] ஆனால் ஏமாற்றமடைகிறார்கள். [QBR]
21. இப்போது, நீங்கள் அந்த நீருற்றுகளைப் போல் இருக்கிறீர்கள். [QBR2] என் தொல்லைகளைக் கண்டு அஞ்சுகிறீர்கள். [QBR]
22. நான் உங்களிடம் உதவியை நாடினேனா? [QBR2] எனக்காக நீங்கள் யாரிடமாவது வெகுமானம் கொடுக்க வேண்டினேனா? [QBR]
23. ‘பகைவனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்! [QBR2] கொடியோரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!’ [QBR2] என்று நான் உங்களிடத்தில் கூறினேனா?
24. “எனவே இப்போது எனக்குக் கற்பியுங்கள், நான் அமைதியாக இருப்பேன். [QBR2] நான் செய்தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள். [QBR]
25. நேர்மையான வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை. [QBR2] ஆனால் உங்கள் விவாதங்கள் எதையும் நிரூபிக்கவில்லை. [QBR]
26. என்னை விமர்சிக்கத் திட்டமிட்டுள்ளீர்களா? [QBR2] மேலும் சோர்வு தரும் வார்த்தைகளைச் சொல்லப் போகிறீர்களா? [QBR]
27. தந்தைகளற்ற பிள்ளைகளின் பொருள்களைப் பெற, நீங்கள் சூதாடவும் செய்வீர்கள். [QBR2] உங்கள் சொந்த நண்பனையே விற்பீர்கள். [QBR]
28. ஆனால் இப்போது, என் முகத்தை ஆராயுங்கள். [QBR2] நான் உங்களிடம் பொய் கூறமாட்டேன். [QBR]
29. எனவே இப்போது உங்கள் மனதை மாற்றுங்கள். [QBR2] அநீதியாய் செயல்படாதீர்கள், மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். [QBR2] நான் தவறேதும் செய்யவில்லை. [QBR]
30. நான் பொய் கூறவில்லை. [QBR2] நான் சரியானவற்றை தவறுகளிலிருந்து பிரித்தறிவேன்” என்றான். [PE]