1. [QS]“யோபுவே, விரும்பினால் கூப்பிடு, ஆனால் யாரும் பதில் தரமாட்டார்கள்! [QE][QS2]நீ எந்த தேவதூதனிடம் திரும்பி பார்ப்பீர்? [QE]
2. [QS]ஒரு மூடனின் கோபம் அவனைக் கொல்லும், [QE][QS2]ஒரு மூடனின் வலிய உணர்வுகள் அவனைக் கொல்லும். [QE]
3. [QS]தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன். [QE][QS2]ஆனால் திடீரென அவன் மாண்டான். [QE]
4. [QS]யாரும் அவனது ஜனங்களுக்கு உதவ முடியவில்லை. [QE][QS2]நியாயச் சபையில் அவர்களுக்கு ஆதரவளிப்பார் எவருமில்லை. [QE]
5. [QS]அவர்களின் பயிர்களையெல்லாம் பசித்தோர் உண்டனர். [QE][QS2]முட்களின் நடுவே வளரும் தானியங்களையும் கூட பசியுள்ள அந்த ஜனங்கள் எடுத்துக்கொண்டனர். [QE]
6. [QS]தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை. [QE][QS2]பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை. [QE]
7. [QS]ஆனால் மனிதனோ நெருப்பிலிருந்து பொறிகள் மேலே எழும்புவது எத்தனை நிச்சயமோ [QE][QS2]அவ்வாறே, தொல்லையனுபவிக்கப் பிறந்திருக்கிறான். [QE]
8. [QS]ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால், [QE][QS2]தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன். [QE]
9. [QS]தேவன் செய்கிற அற்புதமான காரியங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாது. [QE][QS2]தேவன் செய்கிற அதிசயங்களுக்கு முடிவேயில்லை. [QE]
10. [QS]தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார். [QE][QS2]அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார். [QE]
11. [QS]எளிமையானவனைத் தேவன் உயர்த்துகிறார், [QE][QS2]அவர் துயரமுள்ளவனை மகிழ்ச்சியாக்குகிறார். [QE]
12. [QS]புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை, [QE][QS2]அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார். [QE]
13. [QS]ஞானமுள்ளோரையும் அவர்கள் கண்ணிகளிலேயே விழும்படி செய்து [QE][QS2]புத்திசாலித்தனமான அத்திட்டங்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் செய்கிறார். [QE]
14. [QS]அத்தகைய திறமைசாலிகள் பகலிலேயே தடுமாறுகிறார்கள். [QE][QS2]இருளில் தன் பாதையைக் காணத் தடுமாறுகின்றவனைப்போல, அவர்கள் நண்பகலிலும் காணப்படுகிறார்கள். [QE]
15. [QS]தேவன் ஏழைகளைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]திறமைசாலிகளின் கைக்கும் அவர் ஏழைகளை கப்பாற்றுகிறார். [QE]
16. [QS]எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள். [QE][QS2]நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார். [QE][PBR]
17. [QS]“தேவன் திருத்தும் மனிதன் பாக்கியவான். [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னைத் தண்டிக்கும்போது முறையிடாதே. [QE]
18. [QS]தேவன் தான் ஏற்படுத்தும் காயங்களைக் கட்டுகிறார். [QE][QS2]அவர் சிலருக்குக் காயமுண்டாக்கலாம், ஆனால் அவர் கைகளே அவற்றைக் குணமாக்கும். [QE]
19. [QS]ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார். [QE][QS2]ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்! [QE]
20. [QS]பஞ்சக்காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். [QE][QS2]போர்க் காலத்திலும் தேவன் உன்னை மரணத்திலிருந்து பாதுகாப்பார்! [QE]
21. [QS]தங்கள் கூரிய நாவுகளால் ஜனங்கள் உங்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாம். [QE][QS2]ஆனால் தேவன் உன்னைப் பாதுகாப்பார். [QE][QS2]தீயன நிகழும்போது நீ அஞ்சத் தேவையில்லை! [QE]
22. [QS]அழிவைக் கண்டும் பஞ்சத்தைப் பார்த்தும் நீ நகைப்பாய். [QE][QS2]காட்டு மிருகங்களைக் கண்டும் நீ அஞ்சமாட்டாய். [QE]
23. [QS]உன்னுடைய உடன்படிக்கையின்படி வயலின் பாறைகளும் கூட அந்த உடன்படிக்கையில் பங்குகொள்ளும். [QE][QS2]காட்டு மிருகங்களும் கூட உன்னோடு சமாதானம் செய்துக்கொள்ளும். [QE]
24. [QS]உனது கூடாரம் பாதுகாப்பாக இருப்பதால் நீ சமாதானத்தோடு (அமைதியாக) வாழ்வாய். [QE][QS2]உனது கொத்துக்களை எண்ணிப் பார்த்து ஒன்றும் காணாமல் போகாதிருப்பதைக் காண்பாய். [QE]
25. [QS]உனக்குப் பல குழந்ததைகள் பிறப்பார்கள். [QE][QS2]அவர்கள் பூமியின் புற்களைப்போன்று பலராவார்கள். [QE]
26. [QS]அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர். [QE][QS2]ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர். [QE][PBR]
27. [QS]“யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம். [QE][QS2]எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்” என்று கூறினான். [QE]