1. [QS]“யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா? [QE][QS2]அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா? [QE]
2. [QS]யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா? [QE][QS2]அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா? [QE]
3. [QS]யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா? [QE][QS2]மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா? [QE]
4. [QS]யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு [QE][QS2]என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா? [QE]
5. [QS]யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா? [QE][QS2]உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா? [QE]
6. [QS]யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா? [QE][QS2]அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா? [QE]
7. [QS]யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா? [QE][PBR]
8. [QS]“யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்! [QE][QS2]எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்! [QE]
9. [QS]நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு! [QE][QS2]எந்த நம்பிக்கையும் இல்லை! [QE][QS](நம்பிக்கையற்றுப்போவாய்)! [QE][QS2]அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்! [QE]
10. [QS]அதனை எழுப்பிக் கோபமுறுத்த [QE][QS2]எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை. [QE][PBR] [QS]“ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது! [QE]
11. [QS]நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன். [QE][QS2]பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன. [QE][PBR]
12. [QS]“யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும் [QE][QS2]நான் உனக்குக் கூறுவேன். [QE]
13. [QS]ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது. [QE][QS2]அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது! [QE]
14. [QS]லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது. [QE][QS2]அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும். [QE]
15. [QS]லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள [QE][QS2]கேடய வரிசைகள் காணப்படும். [QE]
16. [QS]அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி [QE][QS2]இறுகிப் பிணைந்திருக்கும், [QE]
17. [QS]கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். [QE][QS2]அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும். [QE]
18. [QS]லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும். [QE][QS2]அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும். [QE]
19. [QS]அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும். [QE][QS2]நெருப்புப் பொறிகள் வெளிப்படும். [QE]
20. [QS]கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல் [QE][QS2]லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும். [QE]
21. [QS]லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும், [QE][QS2]அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும். [QE]
22. [QS]லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது. [QE][QS2]ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள். [QE]
23. [QS]அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது. [QE][QS2]அது இரும்பைப்போல கடினமானது. [QE]
24. [QS]லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது. [QE][QS2]அதற்கு அச்சம் கிடையாது. [QE][QS](அது அஞ்சுவதில்லை). [QE][QS2]அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும். [QE]
25. [QS]லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார். [QE][QS2]லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர். [QE]
26. [QS]வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும். [QE][QS2]ஆனால் அவையே எகிறிவிழும். [QE][QS2]அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை! [QE]
27. [QS]லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும். [QE][QS2]உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும். [QE]
28. [QS]அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது, [QE][QS2]உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும். [QE]
29. [QS]பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும். [QE][QS2]மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும். [QE]
30. [QS]கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும். [QE][QS2]தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும். [QE]
31. [QS]கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது. [QE][QS2]பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும். [QE]
32. [QS]லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும். [QE][QS2]அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும். [QE]
33. [QS]லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை. [QE][QS2]அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது. [QE]
34. [QS]கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும். [QE][QS2]அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன். [QE][QS2]கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார். [QE]