1. {#1எலிப்பாஸ் பேசுகிறான் } [PS](1-2)தேமானிலுள்ள எலிப்பாஸ், [PE][PBR] [QS]“யாராவது உன்னுடன் பேச முயன்றால் உன்னைக் கலக்கமுறச் செய்யுமா? [QE][QS2]ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ள யாரால் கூடும்? [QE]
2.
3. [QS]யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய். [QE][QS2]நீ பெலவீனமான கரங்களுக்கு பெலனைத் தந்தாய். [QE]
4. [QS]வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின. [QE][QS2]தாமாக நிற்க முடியாதவர்களுக்கு நீ பெலனளித்தாய். [QE]
5. [QS]ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன, [QE][QS2]நீ துணிவிழக்கிறாய். [QE][QS]தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன, [QE][QS2]நீ கலங்கிப்போகிறாய்! [QE]
6. [QS]நீ தேவனை கனம்பண்ணுகிறாய். [QE][QS2]அவரை நம்புகிறாய். [QE][QS]நீ நல்லவன். [QE][QS2]எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா? [QE]
7. [QS]யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்: [QE][QS2]களங்கமற்றவன் எவனும் அழிக்கப்பட்டதில்லை. [QE]
8. [QS]நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன். [QE][QS2]அவர்கள் எதை விதைத்தார்களோ அதையே அறுவடைச் செய்வதைக் கண்டிருக்கின்றேன்! [QE]
9. [QS]தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது. [QE][QS2]தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது. [QE]
10. [QS]தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள். [QE][QS2]தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார். [QE]
11. [QS]ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் ஜனங்கள் அலைந்து திரிகிறார்கள். [QE][PBR]
12. [QS]“இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது. [QE][QS2]என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன. [QE]
13. [QS]இரவின் கெட்ட கனவாய், [QE][QS2]அது என் தூக்கத்தைக் கெடுத்தது. [QE]
14. [QS]நான் பயந்து நடுங்கினேன். [QE][QS2]என் எலும்புகள் எல்லாம் நடுங்கின. [QE]
15. [QS]ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது. [QE][QS2]என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன. [QE]
16. [QS]ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை. [QE][QS2]என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது. [QE][QS2]அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்: [QE]
17. [QS]‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா? [QE][QS2]தன்னை உண்டாக்கினவரைக் காட்டிலும் மனிதன் தூய்மையாக இருக்க முடியுமா? [QE]
18. [QS]பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை. [QE][QS2]தேவன் தனது தேவதூதர்களிடமும் குற்றங்களைக் காண்கிறார். [QE]
19. [QS]எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்! [QE][QS2]அவர்கள் களிமண் வீடுகளில்[* களிமண் வீடு இதற்கு மனித சரீரம் எனப் பொருள்படும். ] வசிக்கிறார்கள். [QE][QS]இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும். [QE][QS2]பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள். [QE]
20. [QS]ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை. [QE][QS2]அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள், [QE]
21. [QS]அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன. [QE][QS2]அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.’ [QE][PBR]