1. {#1தேவன் யோபுவிடம் பேசுகிறார் } [PS]அப்போது கர்த்தர் சூறாவளியிலிருந்து [PE][PS]யோபுவிடம் பேசினார். தேவன்: [PE][PBR]
2. [QS]“மூடத்தனமானவற்றைக் கூறிக்கொண்டிருக்கும், [QE][QS2]இந்த அறியாமையுள்ள மனிதன் (அஞ்ஞானி) யார்? [QE]
3. [QS]யோபுவே, நீ இடையைக் கட்டிக்கொள் [QE][QS2]நான் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு ஆயத்தமாகு. [QE][PBR]
4. [QS]“யோபுவே, நான் பூமியை உண்டாகினபோது, நீ எங்கே இருந்தாய்? [QE][QS2]நீ அத்தனை கெட்டிக்காரனானால், எனக்குப் பதில் கூறு. [QE]
5. [QS]நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்? [QE][QS2]அளவு நூலால் யார் உலகை அளந்தார்? [QE]
6. [QS]பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது? [QE][QS2]அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்? [QE]
7. [QS]காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின, [QE][QS2]அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்! [QE][PBR]
8. [QS]“யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது, [QE][QS2]கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்? [QE]
9. [QS]அப்போது நான் அதனை மேகங்களால் மூடி, [QE][QS2]அதனை இருளால் பொதிந்து வைத்தேன். [QE]
10. [QS]நான் கடலுக்கு எல்லையை வகுத்து, [QE][QS2]அதை அடைத்த வாயிலுக்கு பின்னே நிறுத்தினேன். [QE]
11. [QS]நான் கடலிடம், ‘நீ இதுவரை வரலாம், இதற்கு அப்பால் அல்ல, [QE][QS2]உனது பெருமையான அலைகள் இங்கே நின்றுவிடும்’ என்றேன். [QE][PBR]
12. [QS]“யோபுவே, உன் வாழ்க்கையில் என்றைக்காவது நீ காலையை ஆரம்பிக்கவோ, [QE][QS2]ஒரு நாளைத் தொடங்கவோ கூறமுடியுமா? [QE]
13. [QS]யோபுவே, பூமியைப் பிடித்து, தீயோரை அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவருமாறு உதறிவிட [QE][QS2]காலையொளிக்கு நீ கூற முடியுமா? [QE]
14. [QS]மலைகளையும் பள்ளத்தாக்கையும் எளிதில் காலையொளியில் காணலாம். [QE][QS2]பகலொளி பூமிக்கு வரும்போது அங்கியின் மடிப்புக்களைப்போல இந்த இடங்களின் அமைப்புக்கள் (வடிவங்கள்) வெளித்தோன்றும். [QE][QS2]முத்திரையிடப்பட்ட களிமண்ணைப் போல அவ்விடங்கள் வடிவங்கொள்ளும். [QE]
15. [QS]தீயோர் பகலொளியை விரும்பார்கள். [QE][QS2]பிரகாசமாக அது ஒளிவிடும்போது, அவர்கள் தீயக் காரியங்களைச் செய்யாதபடி தடுக்கும். [QE][PBR]
16. [QS]“யோபுவே, கடல் புறப்படும் கடலின் ஆழமான பகுதிகளுக்கு நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? [QE][QS2]சமுத்திரத்தின் அடிப்பகுதியில் நீ எப்போதாவது நடந்திருக்கிறாயா? [QE]
17. [QS]மரித்தோரின் உலகத்திற்கு வழிகாட்டும் வாயிற் கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? [QE][QS2]மரணத்தின் இருண்ட இடத்திற்கு வழிகாட்டும் வாயிற்கதவுகளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? [QE]
18. [QS]யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா? [QE][QS2]நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு. [QE][PBR]
19. [QS]“யோபுவே, ஒளி எங்கிருந்து வருகிறது? [QE][QS2]எங்கிருந்து இருள் வருகிறது? [QE]
20. [QS]யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா? [QE][QS2]அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா? [QE]
21. [QS]யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய். [QE][QS2]நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன். [QE][QS2]நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா? [QE][PBR]
22. [QS]“யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள் [QE][QS2]நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? [QE]
23. [QS]தொல்லைகள் மிக்க காலங்களுக்காகவும், போரும் யுத்தமும் நிரம்பிய காலங்களுக்காகவும், [QE][QS2]நான் பனியையும், கல்மழையையும் சேமித்து வைக்கிறேன். [QE]
24. [QS]யோபுவே, சூரியன் மேலெழுந்து வருமிடத்திற்கு, அது கிழக்குக் காற்றைப் பூமியெங்கும் வீசச் செய்யுமிடத்திற்கு [QE][QS2]நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா? [QE]
25. [QS]யோபுவே, மிகுந்த மழைக்காக வானத்தில் பள்ளங்களைத் தோண்டியவர் யார்? [QE][QS2]இடிமுழக்கத்திற்குப் பாதையை உண்டாகியவர் யார்? [QE]
26. [QS]யோபுவே, ஜனங்கள் வாழாத இடங்களிலும், [QE][QS2]மழையைப் பெய்யப்பண்ணுகிறவர் யார்? [QE]
27. [QS]பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது, [QE][QS2]புல் முளைக்க ஆரம்பிக்கிறது. [QE]
28. [QS]யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா? [QE][QS2]பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன? [QE]
29. [QS]யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா? [QE][QS2]வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்? [QE]
30. [QS]பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது. [QE][QS2]சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது! [QE][PBR]
31. [QS]“நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா? [QE][QS2]மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா? [QE]
32. [QS]யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா? [QE][QS2](துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா? [QE]
33. [QS]யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா? [QE][QS2]பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா? [QE][PBR]
34. [QS]“யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு [QE][QS2]உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா? [QE]
35. [QS]மின்னல்களுக்கு நீ கட்டளை பிறப்பிக்கக் கூடுமா? [QE][QS2]அவை உன்னிடம் வந்து, ‘நாங்கள் இங்கு இருக்கிறோம், ஐயா, உனக்கு என்ன வேண்டும்’ எனக் கூறுமா? [QE][QS2]அவை எங்கெங்குப் போகவேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அங்கெல்லாம் அவை செல்லுமா? [QE][PBR]
36. [QS]“யோபுவே, யார் ஜனங்களை ஞானிகளாக்குகிறார்? [QE][QS2]அவர்களுக்குள்ளே ஆழமாக ஞானத்தை வைப்பவன் யார்? [QE]
37. [QS]யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும் [QE][QS2]அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்? [QE]
38. [QS]அதனால் துகள்கள் சேறாக மாறி, [QE][QS2]அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன. [QE][PBR]
39. [QS]“யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா? [QE][QS2]அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா? [QE]
40. [QS]அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன. [QE][QS2]அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன. [QE]
41. [QS]காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கத்தும்போதும், உணவின்றி அங்குமிங்கும் அலையும்போதும் [QE][QS2]யோபுவே, அவற்றிற்கு உணவு ஊட்டுபவன் யார்? என்றார். [QE][PBR]