1. [QS]“இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன. [QE][QS2]இதயம் என் நெஞ்சத்தில் துடிக்கிறது. [QE]
2. [QS]ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்! [QE][QS2]தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது. [QE][QS2]தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள். [QE]
3. [QS]முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார். [QE][QS2]அது பூமி ழுழுவதும் ஒளிர்ந்தது. [QE]
4. [QS]மின்னல் ஒளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும். [QE][QS2]தேவன் அவரது அற்புதமான சத்தத்தால் முழங்குகிறார்! [QE][QS]மின்னல் மின்னும்போது, தேவனுடைய சத்தம் முழங்குகிறது. [QE]
5. [QS]தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது! [QE][QS2]நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார். [QE]
6. [QS]தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார். [QE][QS2]மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார். [QE]
7. [QS]தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும் [QE][QS2]அவர் என்ன செய்யமுடியும் என்பதை அறியுமாறு தேவன் அதைச் செய்கிறார். [QE][QS2]அது அவரது சான்று. [QE]
8. [QS]மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும். [QE]
9. [QS]தெற்கேயிருந்து சூறாவளி வரும். [QE][QS2]வடக்கேயிருந்து குளிர் காற்று வரும். [QE]
10. [QS]தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும், [QE][QS2]அது சமுத்திரங்களை உறையச் செய்யும். [QE]
11. [QS]தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார், [QE][QS2]அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார். [QE]
12. [QS]பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார். [QE][QS2]தேவன் கட்டளையிடுகின்றவற்றை மேகங்கள் செய்யும். [QE]
13. [QS]பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ, [QE][QS2]அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார். [QE][PBR]
14. [QS]“யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள். [QE][QS2]தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார். [QE]
15. [QS]யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? [QE][QS2]அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? [QE]
16. [QS]மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா? [QE][QS2]தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்! [QE][QS2]அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும். [QE]
17. [QS]ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது. [QE][QS2]நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும். [QE]
18. [QS]யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா? [QE][QS2]தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா? [QE][PBR]
19. [QS]“யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு! [QE][QS2]எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம். [QE]
20. [QS]நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன். [QE][QS2]அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன். [QE]
21. [QS]ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. [QE][QS2]காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது. [QE]
22. [QS]தேவனும் அவ்வாறே இருக்கிறார்! [QE][QS2]பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது. தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது. [QE]
23. [QS]சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்! [QE][QS2]நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது! [QE][QS]தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர். [QE][QS2]ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார். [QE][QS]தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார். [QE]
24. [QS]ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள். [QE][QS2]ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான். [QE]