1. “இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன. [QBR2] இதயம் என் நெஞ்சத்தில் துடிக்கிறது. [QBR]
2. ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்! [QBR2] தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது. [QBR2] தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள். [QBR]
3. முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார். [QBR2] அது பூமி ழுழுவதும் ஒளிர்ந்தது. [QBR]
4. மின்னல் ஒளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும். [QBR2] தேவன் அவரது அற்புதமான சத்தத்தால் முழங்குகிறார்! [QBR] மின்னல் மின்னும்போது, தேவனுடைய சத்தம் முழங்குகிறது. [QBR]
5. தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது! [QBR2] நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார். [QBR]
6. தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார். [QBR2] மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார். [QBR]
7. தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும் [QBR2] அவர் என்ன செய்யமுடியும் என்பதை அறியுமாறு தேவன் அதைச் செய்கிறார். [QBR2] அது அவரது சான்று. [QBR]
8. மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும். [QBR]
9. தெற்கேயிருந்து சூறாவளி வரும். [QBR2] வடக்கேயிருந்து குளிர் காற்று வரும். [QBR]
10. தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும், [QBR2] அது சமுத்திரங்களை உறையச் செய்யும். [QBR]
11. தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார், [QBR2] அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார். [QBR]
12. பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார். [QBR2] தேவன் கட்டளையிடுகின்றவற்றை மேகங்கள் செய்யும். [QBR]
13. பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ, [QBR2] அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார்.
14. “யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள். [QBR2] தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார். [QBR]
15. யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? [QBR2] அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? [QBR]
16. மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா? [QBR2] தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்! [QBR2] அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும். [QBR]
17. ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது. [QBR2] நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும். [QBR]
18. யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா? [QBR2] தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா?
19. “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு! [QBR2] எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம். [QBR]
20. நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன். [QBR2] அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன். [QBR]
21. ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. [QBR2] காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது. [QBR]
22. தேவனும் அவ்வாறே இருக்கிறார்! [QBR2] பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது. தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது. [QBR]
23. சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்! [QBR2] நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது! [QBR] தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர். [QBR2] ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார். [QBR] தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார். [QBR]
24. ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள். [QBR2] ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான். [PE]