1. எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன், [QBR]
2. “என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும். [QBR2] இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார். [QBR]
3. நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார், [QBR2] தேவன் நியாயமானவரென நான் நிரூபிப்பேன். [QBR]
4. யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன். [QBR2] நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.
5. “தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை. [QBR2] தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர். [QBR]
6. தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார், [QBR2] தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார். [QBR]
7. தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார். [QBR2] அவர் நல்லோரை அரசர்களாயிருக்க அனுமதிக்கிறார். [QBR2] தேவன் நல்லோருக்கு என்றென்றும் மகிமையைக் கொடுக்கிறார். [QBR]
8. எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால், [QBR2] அப்போது அவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பார்கள். [QBR]
9. அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார். [QBR2] அவர்கள் பாவம் செய்தார்கள் என்பதை தேவன் சொல்வார். [QBR2] அவர்கள் பெருமையாயிருந்தார்கள் என்பதை தேவன் சொல்வார். [QBR]
10. தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார். [QBR2] அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துமாறு தேவன் கட்டளையிடுவார். [QBR]
11. அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார். [QBR2] அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். [QBR]
12. ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள். [QBR2] அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள்.
13. “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள், [QBR2] தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள். [QBR]
14. அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல [QBR2] இளமையிலேயே மரித்துப்போவார்கள். [QBR]
15. ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார். [QBR2] ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.
16. “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார். [QBR2] தொல்லைகளிலிருந்து உன்னை விடுவிக்க தேவன் விரும்புகிறார். [QBR2] உனக்கு வாழ்க்கையை எளிதாக்க தேவன் விரும்புகிறார். [QBR2] உன் மேசையில் மிகுதியான உணவு இருக்கும்படியாகச் செய்ய தேவன் விரும்புகிறார். [QBR]
17. ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய். [QBR2] எனவே ஒரு தீயவனைப்போன்று நீ தண்டிக்கப்பட்டாய். [QBR]
18. யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும். [QBR2] பணம் உனது மனதை மாற்றவிடாதேயும். [QBR]
19. உனது பணம் இப்போது உனக்கு உதவாது. [QBR2] வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது. [QBR]
20. இரவின் வருகையை விரும்பாதேயும். [QBR2] ஜனங்கள் இரவில் மறைந்துபோக முயல்கிறார்கள். [QBR2] அவர்கள் தேவனிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். [QBR]
21. யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய். [QBR2] ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும். [QBR2] தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும்.
22. “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார். [QBR2] தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்! [QBR]
23. தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது. [QBR2] ‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது! [QBR]
24. தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள். [QBR2] தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள். [QBR]
25. தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும். [QBR2] தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும். [QBR]
26. ஆம், தேவன் மேன்னைமயானவர். [QBR2] ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.
27. “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து, [QBR2] அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார். [QBR]
28. ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன. [QBR2] மழை பலர் மீது பெய்கிறது. [QBR]
29. தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும் [QBR2] வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது. [QBR]
30. பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி, [QBR2] சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார். [QBR]
31. தேசங்களை அடக்கியாள்வதற்கும் [QBR2] அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார். [QBR]
32. தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார், [QBR2] அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார். [QBR]
33. புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது. [QBR2] அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான். [PE]