1. [QS]“என்னைக் கவர்கின்ற ஒரு கன்னிப் பெண்ணைப் பாராதிருக்கும்படி [QE][QS2]என் கண்களோடு நான் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டேன். [QE]
2. [QS]சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்? [QE][QS2]உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்? [QE]
3. [QS]தேவன் தொல்லையையும் அழிவையும் கெட்ட ஜனங்களுக்கு அனுப்புகிறார். [QE][QS2]தவறு செய்வோர்க்கு அழிவை அனுப்புகிறார். [QE]
4. [QS]நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் அறிகிறார். [QE][QS2]நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் தேவன் காண்கிறார். [QE][PBR]
5. [QS]“நான் பொய்களாலான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் [QE][QS2]அல்லது நான் பொய் சொல்லவும் ஜனங்களை ஏமாற்றவும் ஓடியிருந்தால், [QE]
6. [QS]அப்போது, தேவன் என்னைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க அளவு கோலைப் பயன்படுத்தட்டும். [QE][QS2]அப்போது நான் களங்கமற்றவன் என்பதை தேவன் அறிவார்! [QE]
7. [QS]நான் சரியான பாதைக்குப் புறம்பே நடந்தால், [QE][QS2]என் கண்கள் என் இருதயத்தை தீமைக்கு நேரே நடத்தினால், [QE][QS2]என் கைகளில் பாவத்தின் அழுக்குப் படிந்திருந்தால், அப்போது தேவன் அறிவார், [QE]
8. [QS]அப்போது நான் நட்ட பயிர்களைப் பிறர் உண்ணட்டும், [QE][QS2]என் பயிர்கள் பிடுங்கப்படட்டும். [QE][PBR]
9. [QS]“நான் பெண்களிடம் காம இச்சை (மோகம்) கொண்டிருந்தால். [QE][QS2]அயலானின் மனைவியோடு தகாத நெறியில் நடக்கும்படி அவன் கதவருகே காத்திருந்தால். [QE]
10. [QS]அப்போது, எனது மனைவி மற்றொருவனின் உணவைச் சமைக்கட்டும், [QE][QS2]பிற மனிதன் அவளோடு படுத்திருக்கட்டும். [QE]
11. [QS]ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது. [QE][QS2]அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும். [QE]
12. [QS]பாலின உறவு சம்மந்தமான பாவம் அனைத்தையும் அழிக்கும்வரை எரியும் நெருப்பைப் போன்றது. [QE][QS2]நான் இதுவரைச் செய்த அனைத்தையும், எனது உடமைகள் யாவற்றையும் அது அழித்துவிடும்! [QE][PBR]
13. [QS]“என் அடிமைகளுக்கு என்னிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டபோது [QE][QS2]அவர்களிடம் நியாயமாயிருக்க நான் மறுத்திருந்தால், [QE]
14. [QS]நான் தேவனைச் சந்திக்கும்போது என்ன செய்வேன்? [QE][QS2]நான் செய்ததைக் குறித்து தேவன் விளக்கம் கேட்டால் நான் என்ன சொல்வேன்? [QE]
15. [QS]என் தாயின் கர்ப்பத்தில் தேவன் என்னை உண்டாக்கினார், தேவன் என் அடிமைகளையும் உண்டாக்கினார், [QE][QS2]நம்முடைய தாயின் கருவில் தேவன் நமக்கு உருவம் கொடுத்தார். [QE][PBR]
16. [QS]“நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை. [QE][QS2]விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன். [QE]
17. [QS]நான் உணவைப் பொறுத்தமட்டில் சுய நலம் பாராட்டியதில்லை. [QE][QS2]நான் எப்போதும் அநாதைகளுக்கு உணவளித்தேன். [QE]
18. [QS]தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன். [QE][QS2]என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன். [QE]
19. [QS]ஆடையில்லாததால் ஜனங்கள் துன்புறுவதைக் கண்டபோதும், [QE][QS2]மேற்சட்டையில்லாத ஏழையைக் கண்டபோதும், [QE]
20. [QS]நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன். [QE][QS2]என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள். [QE]
21. [QS]வாயிலில் ஒரு அநாதை வந்து உதவி வேண்டி நிற்கும்போது [QE][QS2]நான் என் கைமுட்டியை ஒருபோதும் ஆட்டியதில்லை.[* 21ஆம் வசனம் நியாயசபையில் எனக்கு ஆதரவு இருந்தபோதும் நான் ஒரு அநாதையைப் பயமுறுத்தியதில்லை. ] [QE]
22. [QS]நான் எப்போதேனும் அப்படிச் செய்திருந்தால், அப்போது என் கரம் தோளிலிருந்து விழுந்திருக்கும் என நான் நம்புகிறேன்! [QE][QS2]என் கரம் எலும்புக் குழியிலிருந்து அகற்றப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்! [QE]
23. [QS]ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை. [QE][QS2]நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன். [QE][QS2]அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது. [QE][PBR]
24. [QS]“நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை. [QE][QS2]எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன். [QE][QS2]தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை, [QE]
25. [QS]நான் செல்வந்தனாக இருந்தேன். [QE][QS2]ஆனால் அது என்னைப் பெருமைக்காரனாக்கவில்லை! [QE][QS]நான் மிகுதியான பொருளைச் சம்பாதித்தேன். [QE][QS2]ஆனால், என்னைச் சந்தோஷப்படுத்தியது அதுவல்ல! [QE]
26. [QS]நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ [QE][QS2]ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை. [QE]
27. [QS]சூரியன் அல்லது சந்திரனை தொழுதுகொள்ளுமளவிற்கு [QE][QS2]நான் ஒருபோதும் மூடனாக இருந்ததில்லை. [QE]
28. [QS]அதுவும் தண்டிக்கப்படவேண்டிய பாவம் ஆகும். [QE][QS2]நான் அப்பொருள்களை தொழுதுகொண்டிருந்திருப்பேனாகில் சர்வ வல்லமையுள்ள தேவனிடம் உண்மையற்றவனாவேன். [QE][PBR]
29. [QS]“என் பகைவர்கள் அழிந்தபோது நான் மகிழ்ச்சியடைந்ததில்லை. [QE][QS2]தீயவை என் பகைவர்களுக்கு நேரிட்டபோது, நான் அவர்களைக் கண்டு நகைத்ததில்லை. [QE]
30. [QS]என் பகைவர்களை சபிப்பதாலோ, அவர்கள் மரிக்க வேண்டும் என விரும்பியோ [QE][QS2]என் வாய் பாவம் செய்ய நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. [QE]
31. [QS]நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை [QE][QS2]என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள். [QE]
32. [QS]அந்நியர்கள் இரவில் தெருக்களில் தூங்காதபடி [QE][QS2]நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன். [QE]
33. [QS]பிறர் தங்கள் பாவங்களை மறைக்க முயல்கிறார்கள். [QE][QS2]ஆனால் நான் என் குற்றத்தை மறைத்ததில்லை. [QE]
34. [QS]ஜனங்கள் என்ன சொல்வார்களோ? [QE][QS2]என்று நான் அஞ்சியதில்லை. [QE][QS]அந்த அச்சம் என்னை அமைதியாயிருக்கச் செய்ததில்லை. [QE][QS2]நான் வெளியே போகாமலிருக்க அது தடையாயிருக்கவில்லை. [QE][QS2]என்னை ஜனங்கள் வெறுப்பதற்கு (ஜனங்களின் வெறுப்புக்கு) நான் அஞ்சவில்லை. [QE][PBR]
35. [QS]“ஓ! யாரேனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்! [QE][QS2]நான் எனது நியாயத்தை விளக்கட்டும். [QE][QS]சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்குப் பதில் தருவார் என விரும்புகிறேன். [QE][QS2]நான் செய்தவற்றில் தவறென அவர் நினைப்பதை அவர் எழுதி வைக்கட்டும் என்று நான் விரும்புகிறேன். [QE]
36. [QS]அப்போது என் கழுத்தைச் சுற்றிலும் அந்த அடையாளத்தை அணிந்துகொள்வேன். [QE][QS2]ஒரு கிரீடத்தைப்போன்று அதை என் தலைமேல் வைப்பேன். [QE]
37. [QS]தேவன் அதைச் செய்தால். [QE][QS2]நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும். [QE][QS2]தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும். [QE][PBR]
38. [QS]“மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை. [QE][QS2]நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. [QE]
39. [QS]நிலத்திலிருந்து நான் பெற்ற உணவிற்காக எப்போதும் உழவர்களுக்கு ஊதியம் கொடுத்துள்ளேன். [QE][QS2]ஒருவருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்ற நான் ஒருபோதும் முயன்றதில்லை. [QE]
40. [QS]நான் அத்தீயக்காரியங்களை எப்போதேனும் செய்திருந்தால் [QE][QS2]அப்போது என் வயல்களில் கோதுமை, பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாக முள்ளும் களைகளும் முளைக்கட்டும்!” என்றான். [QE][PBR] [PS]யோபின் வார்த்தைகள் (சொற்கள்) முடிவடைந்தன. [PE]