1. {யோபு தான் பிறந்தநாளை சபிக்கிறான்} [PS] பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த [PE][PS] நாளை சபித்தான்.
2. (2-3) அவன், “நான் பிறந்தநாள் என்றென்றும் இராதபடி அழிக்கப்படட்டும் என நான் விரும்புகிறேன். [QBR2] ‘அது ஒரு ஆண்’ என அவர்கள் கூறிய இரவு, என்றும் இருந்திருக்கக் கூடாதென நான் விரும்புகிறேன்! [QBR]
3. அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன். [QBR2] அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன். [QBR2] அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன். [QBR]
4. மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். [QBR2] இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன். [QBR]
5. இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும். [QBR2] நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும். [QBR2] எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம். [QBR]
6. அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும். [QBR2] அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும். [QBR]
7. சில மந்திரவாதிகள் லிவியாதானை [*லிவியாதான் இங்கு இது உண்மையில் கடல் மிருகமான ராட்சசனாகும். சில ஜனங்கள் இதுதான் சூரியனை விழுங்கும் என்று எண்ணுகின்றனர், இதுவே சூரிய கிரகணத்திற்குக் காரணம்.] எழுப்ப விரும்புகிறார்கள். [QBR2] அவர்கள் சாபங்கள் இடட்டும். [QBR2] நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும். [QBR]
8. அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும். [QBR2] அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும். [QBR2] சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும். [QBR]
9. ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை. [QBR2] இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை. [QBR]
10. நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை? [QBR2] நான் ஏன் பிறப்பில் மடியவில்லை? [QBR]
11. ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்? [QBR2] ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின? [QBR]
12. நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன். [QBR]
13. முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த அரசர்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன். [QBR2] இப்போது அழிக்கப்பட்டுக் காணாமற்போன இடங்களைத் தங்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். [QBR]
14. அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர், [QBR2] அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். [QBR]
15. பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை? [QBR2] பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன். [QBR]
16. கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள். [QBR2] சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள். [QBR]
17. சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள். [QBR2] அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை, [QBR]
18. முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள். [QBR2] அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான்.
19. “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்? [QBR2] கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் கசந்து வாழவேண்டும்? [QBR]
20. அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. [QBR2] துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான். [QBR]
21. அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். [QBR2] அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள். [QBR]
22. ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார். [QBR2] அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார். [QBR]
23. சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன். [QBR2] மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன. [QBR]
24. ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன். [QBR2] அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது! [QBR2] நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது! [QBR]
25. நான் அமைதியுற முடியவில்லை. [QBR2] என்னால் இளைப்பாற முடியவில்லை. [QBR] நான் ஓய்வெடுக்க இயலவில்லை. [QBR2] நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான். [PE]
26.