1. “வெள்ளியை ஜனங்கள் பெறும் சுரங்கங்கள் உண்டு, [QBR2] ஜனங்கள் பொன்னை உருக்கிப் புடமிடும் (தூயதாக்கும்) இடங்கள் உண்டு. [QBR]
2. மனிதர்கள் நிலத்திலிருந்து இரும்பை வெட்டியெடுக்கிறார்கள், [QBR2] செம்பு பாறையிலிருந்து உருக்கி எடுக்கப்படுகிறது. [QBR]
3. வேலையாட்கள் குகைகளுக்குள் விளக்குகளை எடுத்துச்செல்கிறார்கள். [QBR2] அவைகளை குகைகளின் ஆழமான பகுதிகளில் தேடுகிறார்கள். [QBR2] ஆழ்ந்த இருளில் அவர்கள் பாறைகளைத் தேடிப்பார்க்கிறார்கள். [QBR]
4. தாது இருக்கும் பகுதிகளைத் தேடி, வேலையாட்கள் நிலத்தினுள் ஆழமாகத் தோண்டுகிறார்கள். [QBR2] ஜனங்கள் வசிக்காத (வாழாத) தூரமான இடங்களிலும், ஒருவரும் சென்றிராத இடங்களிலும், அவர்கள் நிலத்தினுள் ஆழமாகப் போகிறார்கள். [QBR2] மற்ற ஜனங்களைக் காட்டிலும் ஆழமான இடங்களில், அவர்கள் கயிறுகளிலிருந்து தொங்குகிறார்கள். [QBR]
5. நிலத்தின் மேல் உணவு விளைகிறது, [QBR2] ஆனால் நிலத்திற்குக் கீழே, அனைத்தும் நெருப்பினால் உருக்கப்பட்டதுபோல, அது வேறு மாதிரியாகத் தோன்றுகிறது. [QBR]
6. நிலத்தின் கீழே இந்திர நீலக்கற்கள் காணப்படும். [QBR2] அங்குத் தூயப் பொன் பொடிகள் உண்டு. [QBR]
7. நிலத்தின் கீழுள்ள பாதைகளைப்பற்றிக் காட்டுப் பறவைகள் கூட அறியாது. [QBR2] அந்த இருண்ட பாதைகளை வல்லூறும் பார்த்ததில்லை. [QBR]
8. காட்டு மிருகங்கள் அப்பாதையில் நடந்ததில்லை. [QBR2] சிங்கங்கள் அவ்வழியில் பயணம் செய்ததில்லை. [QBR]
9. வேலையாட்கள் மிகக் கடினமான பாறைகளைத் தோண்டுகிறார்கள். [QBR2] அப்பணியாட்கள் பர்வதங்களை தோண்டி அதனை வெட்டாந்தரையாக்குகிறார்கள். [QBR]
10. வேலையாட்கள் பாறைகளினூடே நீர்க் கால்களை வெட்டுகிறார்கள். [QBR2] எல்லா பாறைகளின் பொக்கிஷங்களையும் அவர்கள் பார்க்கிறார்கள். [QBR]
11. பணியாட்கள் தண்ணீரைத் தடை செய்ய, அணைகளைக் கட்டுகிறார்கள். [QBR2] அவர்கள் மறை பொருளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்கள்.
12. “ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்? [QBR2] நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்? [QBR]
13. ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம், [QBR2] பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது. [QBR]
14. ஆழமான சமுத்திரம், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது. [QBR2] கடல், ‘ஞானம் இங்கு என்னிடம் இல்லை’ என்கிறது. [QBR]
15. மிகத்தூய பொன்னாலும் கூட, உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது! [QBR2] ஞானத்தை வாங்கப் போதுமான அளவு வெள்ளி இவ்வுலகில் இராது! [QBR]
16. ஓபீரின் தங்கத்தாலோ, கோமேதகத் தாலோ, இந்திர நீலக்கல்லாலோ, [QBR2] நீங்கள் ஞானத்தை வாங்க முடியாது. [QBR]
17. ஞானம் பொன் அல்லது படிகத்தைக் காட்டிலும் சிறப்பானது! [QBR2] பொன்னில் பதிக்கப்பெற்ற விலையுயர்ந்த கற்களால் ஞானத்தை வாங்கமுடியாது. [QBR]
18. பவளம், சூரியகாந்தம் ஆகியவற்றிலும் ஞானம் உயர்ந்தது. [QBR2] சிவந்தக் கற்களைக் காட்டிலும் ஞானம் விலையுயர்ந்தது. [QBR]
19. எத்தியோப்பியா நாட்டின் புஷ்பராகம் ஞானத்தைப்போன்று விலைமதிப்பபுடையதல்ல. [QBR2] தூயப் பொன்னால் உங்களால் ஞானத்தை வாங்கமுடியாது.
20. “எனவே ஞானம் எங்கிருந்து வருகிறது? [QBR2] எங்கு நாம் புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்? [QBR]
21. பூமியின் உயிரினங்களுக்கு எல்லாம் ஞானம் மறைந்திருக்கிறது. [QBR2] வானத்துப் பறவைகள் கூட ஞானத்தைக் காண முடியாது. [QBR]
22. மரணமும் அழிவும், ‘நாங்கள் ஞானத்தைக் கண்டதில்லை. [QBR2] நாங்கள் அதைக் குறித்த வதந்திகளைக் காதினால் மட்டும் கேட்டோம்’ என்கின்றன.
23. “தேவன் மட்டுமே ஞானத்தின் வழியை அறிகிறார். [QBR2] தேவன் மட்டுமே ஞானம் இருக்குமிடத்தை அறிகிறார். [QBR]
24. பூமியின் இறுதிப் பகுதிகளையும் தேவனால் பார்க்க முடிகிறது. [QBR2] வானின் கீழுள்ள எல்லாவற்றையும் தேவன் பார்க்கிறார். [QBR]
25. தேவன் காற்றிற்கு அதன் வல்லமையை அளித்தார். [QBR2] கடல்களை எத்தனை பெரிதாக படைக்க வேண்டுமென்று தேவன் முடிவெடுத்தார். [QBR]
26. எங்கே மழையை அனுப்புவதென்றும், [QBR2] இடி முழக்கங்களை எங்கே செலுத்துவதென்றும் தேவன் முடிவெடுக்கிறார். [QBR]
27. தேவன் ஞானத்தைக் கண்டு, அதைப் பற்றி யோசித்தார். [QBR2] ஞானத்தின் மதிப்பை தேவன் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டார். [QBR]
28. தேவன் மனிதரை நோக்கி, ‘கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள். [QBR2] அதுவே ஞானம் ஆகும், தீமைச் செய்யாதீர்கள் அதுவே புரிந்து கொள்ளும் திறன் ஆகும்!’ ” என்றார். [PE]