1. {#1யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான் } [PS]அப்போது யோபு பதிலாக: [PE][PBR]
2. [QS]“பில்தாத், சோப்பார், எலிப்பாஸ் ஆகியோரே, சோர்வுற்று நலிந்த இம்மனிதனுக்கு நீங்கள் எப்படி உதவி செய்தீர்கள்? [QE][QS2]ஆம், நீங்கள் உண்மையிலேயே நல்ல ஊக்கமூட்டுபவர்களாக இருந்திருக்கிறீர்கள்! [QE][QS]உண்மையிலேயே நீங்கள் என் தளர்ந்துப்போன கரங்களை மறுபடியும் பெலப்படசெய்தீர்கள். [QE]
3. [QS]ஆம், ஞானமற்றவனுக்கு நீங்கள் அற்புதமான அறிவுரையைத் தந்திருக்கிறீர்கள்! [QE][QS2]நீங்கள் எத்தனை ஞானவான்கள் என்பதை உண்மையாகவே காட்டியிருக்கிறீர்கள்![* வாக்கியம் 2-3 யோபு இங்கே சொல்வதைப் போல் உண்மையில் அர்த்தம் கொள்ளவில்லை. யோபு பலியிடப்படுகிறான். அவன் இதனை அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை என்பதைப் போல் பேசுகிறான். ] [QE]
4. [QS]இவற்றைச் சொல்ல உங்களுக்கு உதவியவர் யார்? [QE][QS2]யாருடைய ஆவி உங்களுக்கு எழுச்சியூட்டியது? [QE][PBR]
5. [QS]“பூமிக்கு அடியிலுள்ள வெள்ளங்களில் மரித்தோரின் ஆவிகள் பயத்தால் நடுங்குகின்றன. [QE]
6. [QS]ஆனால் தேவனால் மரணத்தின் இடத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். [QE][QS2]மரணம் தேவனிடமிருந்து மறைந்திருக்கவில்லை. [QE]
7. [QS]வெறுமையான இடத்தில் தேவன் வடக்கு வானத்தைப் பரப்பினார். [QE][QS2]வெற்றிடத்தின் மேல் தேவன் பூமியைத் தொங்கவிட்டார். [QE]
8. [QS]தேவன் அடர்ந்த மேகங்களை தண்ணீரால் நிரப்புகிறார். [QE][QS2]மிகுந்த பாரம் மேகங்களை உடைத்துத் திறக்காதபடி தேவன் பார்க்கிறார். [QE]
9. [QS]முழு நிலாவின் முகத்தை தேவன் மூடுகிறார். [QE][QS2]அவர் தமது மேகங்களை அதன் மீது விரித்து அதைப் போர்த்துகிறார். [QE]
10. [QS]தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து [QE][QS2]ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார். [QE]
11. [QS]தேவன் பயமுறுத்தும்போது [QE][QS2]வானைத் தாங்கும் அஸ்திபாரங்கள் அச்சத்தால் நடுங்குகின்றன. [QE]
12. [QS]தேவனுடைய வல்லமை கடலை அமைதிப்படுத்துகிறது. [QE][QS2]தேவனுடைய ஞானம் ராகாபின் உதவியாளர்களை அழித்தது. [QE]
13. [QS]தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். [QE][QS2]தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது. [QE]
14. [QS]தேவன் செய்கிற வியக்கத்தக்க காரியங்களில் இவை சிலவே. [QE][QS2]தேவனிடமிருந்து ஒரு சிறிய இரகசிய ஒலியையே நாம் கேட்கிறோம். [QE][QS2]தேவன் எத்தனை மேன்மையானவரும் வல்லமையுள்ளவரும் என்பதை ஒருவனும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது” என்றான். [QE][PBR]