1. {#1பில்தாத் யோபுக்குப் பதில் கூறுகிறான் } [PS]சூகியனான பில்தாத் பதிலாக: [PE][PBR]
2. [QS]“தேவனே அரசாள்பவர். [QE][QS2]ஒவ்வொரு மனிதனையும் அவருக்கு பயந்து மதிக்கச் செய்கிறார். [QE][QS]தேவன் தமது உன்னதமான இடத்தில் சமாதானமாக வைக்கிறார். [QE]
3. [QS]அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது. [QE][QS2]தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது. [QE]
4. [QS]தேவனுக்கு முன்பாக நீதிமான் யார் இருக்க முடியும்? [QE][QS2]மனித இனத்தில் ஒருவனும் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது. [QE]
5. [QS]தேவனுடைய கண்களுக்கு சந்திரன் தூய்மையானதோ ஒளியுடையதோ அல்ல. [QE][QS2]நட்சத்திரங்களும் அவருடைய பார்வையில் தூயவை அல்ல. [QE]
6. [QS]ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். [QE][QS2]பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!” என்றான். [QE]