1. “சர்வ வல்லமையுள்ள தேவன், ஜனங்களின் வாழ்வில் கேடுகள் நிகழும் காலத்தை அறிந்த போதும் [QBR2] அவர் அதற்குப் பரிகாரம் செய்யும் காலத்தை அவரைப் பின்பற்றுவோர் அறியமுடியாமலிருப்பது ஏன்?
2. “அயலானின் நிலத்தின் பகுதியை அடைவதற்காக ஜனங்கள் எல்லைக் குறிப்புகளை மாற்றுகிறார்கள். [QBR2] ஜனங்கள் மந்தைகளைத் திருடி, வேறு மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். [QBR]
3. பெற்றோரற்ற அனாதைப் பிள்ளைகளுக்குச் சொந்தமான கழுதையை அவர்கள் திருடுகிறார்கள். [QBR2] விதவை தான் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும்வரை அவளது பசுவைக் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். [QBR]
4. ஏழைகள் வீடின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அலையும்படி வற்புறுத்துகிறார்கள். [QBR2] தீயோரிடமிருந்து அந்த ஏழைகள் தங்களை ஒளித்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
5. “பாலைவனத்தில் உணவு தேடி அலையும் காட்டுக் கழுதைகளைப்போல் ஏழைகள் இருக்கிறார்கள். [QBR2] அவர்கள் உணவு தேடுவதற்காக அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள். [QBR2] அவர்களின் குழந்தைகளுக்காக உணவு பெறும் பொருட்டு அவர்கள் மாலையில் வெகு நேரம்வரை உழைக்கிறார்கள். [QBR]
6. வயல்களில் வைக்கோலும் புல்லும் வெட்டியபடி ஏழைகள் இரவில் வெகு நேரம் உழைக்க வேண்டும். [QBR2] வயல்களில் திராட்சைப் பழங்களைப் பறித்துச் சேர்ப்பவர்களாய், அவர்கள் செல்வந்தர்களுக்காக உழைக்க வேண்டும். [QBR]
7. இரவு முழுவதும் ஆடையின்றி ஏழைகள் தூங்க வேண்டும். [QBR2] குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்குப் போர்வைகள் இல்லை. [QBR]
8. அவர்கள் பர்வதங்களில் மழையால் நனைந்திருக்கிறார்கள். [QBR2] குளிரிலிருந்து காப்பதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை. [QBR2] எனவே அவர்கள் பெரிய பாறைகளுக்கு அருகே அண்டிக்கொள்கிறார்கள். [QBR]
9. தீயோர் பால் மணம் மாறாத குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரிக்கிறார்கள். [QBR2] கடனுக்கு உறுதிப்பொருளாக அவர்கள் ஒரு ஏழையின் குழந்தையை எடுத்துக்கொள்கிறார்கள்.
10. ஏழைகளுக்கு ஆடையில்லை. எனவே அவர்கள் வேலை செய்யும்போது நிர்வாணமாயிருக்கிறார்கள். [QBR2] தீயோருக்கு அவர்கள் தானியக்கட்டுகளைச் சுமந்துச் செல்கிறார்கள். [QBR2] ஆனால் அந்த ஏழைகள் பசியோடிருக்கிறார்கள். [QBR]
11. ஏழைகள் ஒலிவ எண்ணெயைப் பிழிந்தெடுக்கிறார்கள். [QBR2] திராட்சைரசம் பிழியும் இடத்தில் அவர்கள் திராட்சைக்கனிகளின் மேல் நடக்கிறார்கள். [QBR2] ஆனால் அவர்களுக்குப் பருகுவதற்கு எதுவுமில்லை. [QBR]
12. நகரத்தில் மரிப்போரின் துயரக்குரல்களை நீ கேட்க முடியும். [QBR2] துன்புறும் அந்த ஜனங்கள் உதவிக்காக குரலெழுப்புகிறார்கள். [QBR2] ஆனால் தேவன் செவிசாய்ப்பதில்லை.
13. “சிலர் ஒளிக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள். [QBR2] தேவன் விரும்புவது எதுவென அவர்கள் அறிய விரும்பமாட்டார்கள். [QBR2] தேவன் விரும்புகிறபடி அவர்கள் வாழமாட்டார்கள். [QBR]
14. ஒரு கொலைகாரன் அதிகாலையில் எழுந்து திக்கற்ற ஏழைகளைக் கொல்கிறான். [QBR2] இரவில் அவன் ஒரு திருடனாகிறான். [QBR]
15. விபச்சாரம் செய்பவன் (தகாத நெறியில் ஒழுகுபவன்) இரவுக்காகக் காத்திருக்கிறான். [QBR2] ‘யாரும் என்னைப் பார்க்கமாட்டார்கள்’ என அவன் நினைக்கிறான். [QBR2] ஆயினும் அவன் தனது முகத்தை மூடிக்கொள்கிறான். [QBR]
16. இரவில் இருள் சூழ்ந்திருக்கும்போது, தீயோர் ஜனங்களின் வீடுகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். [QBR2] ஆனால் பகலொளியில், அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்துகொண்டு பூட்டிக்கொள்கிறார்கள். [QBR2] அவர்கள் ஒளியைவிட்டு விலகியிருக்கிறார்கள். [QBR]
17. தீயோருக்கு மிக இருண்ட இரவுகள் காலை நேரத்தைப் போன்றது. [QBR2] ஆம், அந்த மரண இருளின் பயங்கரத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள்!
18. “வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொருள்களைப்போன்று தீயோர் அகற்றப்படுவார்கள். [QBR2] அவர்களுக்குச் சொந்தமான நிலம் சபிக்கப்பட்டது, எனவே அவர்கள் தங்கள் வயல்களிலிருந்து திராட்சைக் கனிகளைத் திரட்டமாட்டார்கள். [QBR]
19. குளிர் காலத்துப் பனியிலிருந்து வரும் தண்ணீரை, வெப்பமும், உலர்ந்ததுமான காலம் கவர்ந்துவிடும். [QBR2] எனவே அந்தப் பாவிகள் கல்லறைக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். [QBR]
20. தீயவன் மரிப்பான், அவனது சொந்த தாயார் கூட அவனை மறந்துவிடுவார். [QBR2] அவன் உடலைத் தின்னும் புழுக்களே, அவனை விரும்புகிறவளாயிருக்கும். [QBR] ஜனங்கள் அவனை நினைவுகூரமாட்டார்கள். [QBR2] எனவே அத்தீயவன் மரத்துண்டைப்போன்று உடைந்துபோவான். [QBR]
21. குழந்தைகளற்ற பெண்களைத் (மலடிகளை) தீயோர் துன்புறுத்துவர். [QBR2] கணவர்களை இழந்த பெண்களுக்கு (விதவைகளுக்கு) உதவ அவர்கள் மறுக்கிறார்கள். [QBR]
22. ஆற்றலுள்ள மனிதர்களை அழிக்க, தீயோர் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். [QBR2] தீயோர் ஆற்றல் பெறக்கூடும், ஆனால், அவர்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையின் மீது நிச்சயமில்லை. [QBR]
23. தீயோர் குறுகியகாலம் பாதுகாப்பாகவும் ஆபத்தின்றியும் உணரலாம். [QBR2] தேவன் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார். [QBR]
24. தீயோர் சிலகாலம் வெற்றியடையலாம். [QBR2] ஆனால் அவர்கள் அழிந்துப்போவார்கள். [QBR] தானியத்தைப்போன்று அவர்கள் அறுக்கப்படுவார்கள். [QBR2] அத்தீய ஜனங்கள் பிறரைப் போலவே எல்லோராலும் வெட்டி வீழ்த்தப்படுவார்கள்.
25. “இவை உண்மையென நான் வாக்குறுதியளிக்கிறேன்! [QBR2] நான் பொய் கூறியதாக யார் நிரூபிக்கக் கூடும்? [QBR2] நான் தவறிழைத்தேனெனயார் காட்டக் கூடும்?” என்றான். [PE]